scorecardresearch

‘கயல்’ சந்திரனுக்கு ஜோடியான மலையாள நடிகை

‘கயல்’ சந்திரன் நடிக்கும் புதிய படத்தில், மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

kayal chandran, ram bala

‘கயல்’ சந்திரன் நடிக்கும் புதிய படத்தில், மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.

‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா, சந்தானத்தை வைத்து ‘தில்லுக்கு துட்டு’ என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அடுத்த படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக ‘கயல்’ சந்திரன் நடிக்கிறார். ஹீரோயினாக மலையாளத்தைச் சேர்ந்த ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார். இவர், ‘ஜேக்கபிண்டே ஸ்வர்கராஜ்யம்’ படத்தில் நடித்தவர். இதுதான் அவருக்கு முதல் தமிழ்ப் படம்.

‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ படத்தைத் தயாரித்துவரும் பி.எஸ்.ரகுநந்தனின் ‘2 எம்.பி. புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ‘இனிமே இப்படித்தான்’, ‘கட்டப்பாவ காணோம்’ படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் தயாநிதி, இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

ராம் பாலாவின் ட்ரேட் மார்க்கான காமெடிக்கதையாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஊர்வசி, மனோபாலா, லிவிங்ஸ்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சென்னை, காரைக்குடி மற்றும் புதுச்சேரியில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Reba monica john paired with kayal chandran