அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவர இருக்கும் படம் ‘விவேகம்’. ஹாலிவுட் ஸ்டைலில் அஜித்தை காட்டியிருப்பதால், ரசிகர்களின் டெம்போ உச்சக்கட்டத்தில் உள்ளது. அஜித்தின் மனைவியாக காஜல் அகர்வாலும், ஒரு முக்கியமான ரோலில் அக்ஷராஹாசனும் நடித்துள்ளனர். அதேபோல், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
குறிப்பாக, இப்படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகள் பல வருடங்களுக்கு பேசும் வகையில் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் நடிகர் 'செர்ஜ்க்ரோசன்' விவேகம் படத்தில் நடித்துள்ளார். இவர் 'கேசினோ ராயல்' , '300' , 'தி டிரான்ஸ்போர்ட்டர் ரீ ஃபீயூல்ட்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கடந்த மே மாதம் வெளியான 'விவேகம்' டீசர், இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்தது. முன்பு சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டியூப்லைட்’ திரைப்படம்தான் 5 லட்சம் லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. விவேகம் படத்தின் டீசர் வெளியான சில நாட்களிலேயே அந்த சாதனை முறியடித்தது. தற்போது வரை 5,34,697 லைக்குகளைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசர் என்ற சாதனையைப் படைத்துள்ளது.
அதேபோல், விவேகம் படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல்,"சர்வைவா". யோகிபி பாடிய இந்தப் பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. இதுவரை யூடியூபில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்த பாடலை பார்த்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று அதிகாலை(வியாழன்) 12:01-க்கு மணிக்கு 'விவேகம்' படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. தற்போது வரை இந்த டிரைலரை 3,204,808 பேர் பார்த்துள்ளனர். 318,566 பேர் டிரைலரை லைக் செய்துள்ளனர். அதாவது டிரைலர் வெளியான 12 மணி நேரத்திலேயே 3 லட்சம் பேர் இதனை லைக் செய்துள்ளனர். உலகிலேயே, எந்தவொரு படத்தின் டிரைலரும் 12 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகளை இதுவரை பெற்றதில்லை. முதன்முறையாக, உலக சினிமா வராலற்றில், விவேகம் படத்தின் டிரைலர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளது. இது அஜித் ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
வரும் ஆகஸ்ட் 24-ஆம் தேதி, இப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/yJdHR8nCYWk