/indian-express-tamil/media/media_files/2025/10/08/tvk-vma-2025-10-08-18-02-34.jpg)
சமீபத்தில் நடிகர் விஜய்-யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) கரூர் பொதுக்கூட்டத்தில் நடந்த கூட்ட நெரிசல் குறித்து, காந்தாரா படத்தின் இயக்குனர் மற்றும் நடிகரான ரிஷப் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
சமீபத்தில் ஒரு நேர்காணலில், பேசிய அவர், இந்தத் துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை ஒரு தனிநபரின் தோல்வியாகக் குறிப்பிடாமல், இது ஒரு பொதுவான தவறு என்று குறிப்பிட்டுள்ளார். “இது ஒரு தனி நபரின் தவறு என்று நான் நினைக்கவில்லை. ஒருவேளை இது பலரால் செய்யப்பட்ட ஒரு கூட்டுத் தவறாக இருக்கலாம். இதைக் கட்டுப்படுத்தி இருக்கலாம். அதற்குத்தான் நாம் அதை ஒரு விபத்து என்று சொல்கிறோம். இது வேண்டுமென்றே நடந்ததல்ல, என்று அவர் கூறினார்.
ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களை கொண்டாடும் 'ஹீரோயிசம்' பற்றிய அம்சத்தையும், தான் அதை எப்படிப் பார்க்கிறேன் என்பதையும் குறிப்பிட்ட ரிஷப் ஷெட்டி, ஒரு ஹீரோவையோ அல்லது அவரது கேரக்டரையோ நாம் விரும்பினால், நாம் ஹீரோயிசத்தைப் பின்பற்றுகிறோம். அதைப் பற்றி நான் எப்படி கருத்து சொல்ல முடியும்? இதுபோன்ற விபத்துக்கள் நடக்கும்போது அது துரதிர்ஷ்டவசமானது; அங்கு சுமார் 41 பேர் இறந்தனர்.
மேலும், கூட்டம் கட்டுப்படுத்துவது குறித்த கடினமான இத்தகைய சூழ்நிலைகளில் காவல்துறை மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்களை மட்டும் முழுவதுமாகக் குறை சொல்வது பயனற்றது. நாம் எளிதாக காவல்துறையையோ அல்லது அரசாங்கத்தையோ குறை சொல்லலாம். அவர்களுக்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால் சில சமயங்களில் ஒரு கும்பலைக் கட்டுப்படுத்துவதில் அவர்களும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்,” என்று ரிஷப் விளக்கினார்.
கரூர் சம்பவம், பொது நிகழ்வுகளில் மக்கள் கூட்டத்தை கவனக்குறைவாக கையாள்வது தொடர்பாக பல சிக்கல்களை எழுப்பியுள்ளது. குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலிகொண்ட இந்தச் சம்பவம், நிகழ்வு அமைப்பாளர்கள் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க கட்சியின் மோசமான ஏற்பாடு மற்றும் நிர்வாகத்தின் மீது பெரும்பாலும் குற்றம் சாட்டப்பட்டது. விஜய் இந்தச் சூழ்நிலையை கையாண்ட விதம் குறித்தும், கள நிலவரம் தெரிந்தும் அவர் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும், அவர் ஏன் கரூர் சென்று இறந்தவர்களின் குடும்பங்களை சந்திக்கவில்லை என்றும் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், விஜய் தனது 'எக்ஸ்' சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது உறுதியான ஆதரவைத் தெரிவித்தார். அண்மையில், நடிகர் விஜய் ஒவ்வொரு குடும்பத்துடனும் வீடியோ அழைப்பில் பேசி, அவர்களுக்கு தனது ஆதரவை உறுதி செய்ததோடு, விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.