இந்த ஆண்டில் மட்டும் 5 கன்னட படங்கள் ரூ.100 கிளப்பில் இணைந்துள்ளன.
ரிஷாப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள கன்னட படம் காந்தாரா. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
தொடர்ந்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு காரணமாக இந்தப் படம் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ரிஷாப் ஷெட்டி அழகாக தமிழும் பேசுகிறார்.
இந்த நிலையில் நடப்பாண்டில் மட்டும் 5 கன்னட படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளன. இதற்கு முன்னர், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஜேம்ஸ், ரஷித் ஷெட்டியின் 777 சார்லி, கிச்சா சுதீப்பின் விக்ராந்த் ரோணா ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலித்து இருந்தன.
யஷ்ஷின் கேஜிஎஃப் 2 திரைப்படம் டங்கல், பாகுபலி 2 உள்ளிட்ட படங்களுடன் ரூ.1000 கோடி வசூல் பட்டியலில் உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் 5 கன்னட படங்கள் வசூல் பட்டியலில் ரூ.100 கோடி கிளப்பை கடந்து சாதனை படைத்துள்ளன.
ரூ.100 வசூல் பட்டியலில் அதிக படங்கள் பட்டியலில் தமிழ் முதலிடத்திலும் தெலுங்கு இரண்டாம் இடத்திலும் உள்ளது. கடந்த காலங்களில் சக்கை போடு போட்ட பாலிவுட் தற்போது ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைய கூட தள்ளாடி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“