வரிசையா 9 படம் தோல்வி, ஆனா இந்த படம் ஜெயிக்கணும்; பிரபல இயக்குனரிடம் சொன்ன கேப்டன்!

முதல் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்த் தன்னிடம் பேசியது குறித்து இயக்குநர் செல்வமணி மனம் திறந்துள்ளார்.

முதல் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜயகாந்த் தன்னிடம் பேசியது குறித்து இயக்குநர் செல்வமணி மனம் திறந்துள்ளார்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
rk

90-களில் தமிழ் சினிமாவை மிரள வைத்த அதிரடி இயக்குநர்களில் ஒருவர் ஆர்.கே.செல்வமணி. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராக இருந்தார்.தொடர்ந்து,  1980-ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிப்பில் ‘புலன் விசாரணை’ படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் ரூபினி, ஆனந்த் ராஜ், சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

Advertisment

இந்தப் படம் சில அரசியல் பெரியவர்களின் தூண்டுதலின் பேரில் பல பெண்களைக் கடத்தி கொன்ற ஆட்டோ சங்கரின் நிஜ வாழ்க்கை வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் ரிலீஸாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, விஜயகாந்த் நடிப்பில் ’கேப்டன் பிராபகரன்’ திரைப்படத்தை செல்வமணி இயக்கினார். வனக்கடத்தல் வீரப்பனை எதிர்த்துப் போராடும் ஒரு காவல் அதிகாரியின் கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜயகாந்த் ‘கேப்டன்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். பின்னர், ‘செம்பருத்தி’, ‘பொன் விலங்கு’, ‘கண்மணி’, ‘அதிரடிபடை’, ‘ராஜ முத்திரை’ போன்ற படங்களை இயக்கினார். இதையடுத்து இயக்குநர் செல்வமணி, உச்ச நடிகையாக இருந்த  ரோஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், முதல் படத்தின் போது நடிகர் விஜயகாந்த் தன்னிடம் கூறியது குறித்து இயக்குநர் செல்வமணி நேர்காணல் ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

அவர் பேசியதாவது, “புலன் விசாரணை படத்தின் போது விஜயகாந்த் என்னிடம் வந்து செல்வமணி எனக்கு இதற்கு முன்பே 9 படங்கள் தோல்வியடைந்துவிட்டது. இந்த படம் என்னுடைய 10-வது படம். இன்னும் நான்கு படங்கள் என் கையில் இருக்கிறது. அதில், எதாவது ஒன்று ஓடிவிடும். அதன்பின்னர் ஒரு இரண்டு வருடங்களுக்கு எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால், நீ இந்த படத்தை சரியாக பண்ணவில்லை என்றால் இதுதான் உனக்கு முதலும் கடைசியும் படம். 

Advertisment
Advertisements

நல்லது சொன்னால் கேட்டுக்கொள். நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், மற்றவர்கள் சொல்வதை கேட்கக் கூடாது என்று இருக்காதே. படம் வெற்றி பெற்றால் முதல் பெயர் எனக்கு வரும். இரண்டாவது பெயர் உனக்கு வரும். அதனால் தயவு செய்து நல்ல படம் எடு என்று சொன்னார். அதுதான் அவரது குணம். இதுவரை அவரை போன்று ஒரு நடிகர் எனக்கு அமையவே இல்லை” என்றார்.

Cinema Vijayakanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: