அஜித்துடன் முதன்முறையாக இணைந்த காமெடி நடிகர்

அஜித் நடிப்பில், சிவா இயக்க இருக்கும் ‘விசுவாசம்’ படத்தில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித் நடிப்பில், சிவா இயக்க இருக்கும் ‘விசுவாசம்’ படத்தில், காமெடி நடிகர் ரோபோ சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாக இருக்கும் படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை, ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அஜித் – நயன்தாரா இணைந்து நடிக்கும் நான்காவது படம் இது.

டி.இமான், ‘விசுவாசம்’ படத்துக்கு இசையமைக்கிறார். அஜித் படத்துக்கு அவர் இசையமைப்பது இதுதான் முதல்முறை. இந்தப் படத்தில், காமெடி நடிகர்கள் தம்பி ராமையா மற்றும் யோகி பாபு இருவரும் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காமெடி நடிகரான ரோபோ சங்கரும் ‘விசுவாசம்’ படத்தில் இணைந்துள்ளார். அவர் அஜித்துடன் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை. சன் மற்றும் விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பாப்புலரான ரோபோ சங்கருக்கு, தனுஷுடன் நடித்த ‘மாரி’ படம் மிகப்பெரிய பாப்புலாரிட்டியை பெற்றுத் தந்தது. அதன்பிறகு பல படங்களில் நடித்துவரும் ரோபோ சங்கருக்கு, தற்போது அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

×Close
×Close