Advertisment
Presenting Partner
Desktop GIF

நாங்க வேற.. வேற.. வேற மாறி..!' அஜித் லேட்டஸ்ட் பாட்டுக்கு கண்ணம்மா ரோஷினி துள்ளல் டான்ஸ்

Actress Roshini haripriyan dancing Naanga Vera Maari Song from valimai movie video goes viral in Social media Tamil News: நடிகை ரோஷினி ஹரிப்ரியன், 'நாங்க வேற மாறி' பாடலுக்கு மாஸான குத்தாட்டம் போட்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Roshini haripriyan Tamil News: roshini dancing for valimai movie song video goes viral

Roshini haripriyan Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வாழ்ந்து இருந்தவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர், திடீரென சீரியலுக்கு விடுப்பு கொடுத்தார். அவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisment
Image
ரோஷினி ஹரிப்ரியன்

இதற்கிடையில், குக் வித் கோமாளி சீசன் 3ல் போட்டியாளர்களாக களமிறங்கியுள்ள ரோஷினி, விஜய் டிவிக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும், இந்த ஷோவில் சமையலில் அசத்தி வரும் இவர் மற்ற போட்டியாளர்களுக்கு கொஞ்சம் டஃப் கொடுக்கிறார் என்றும் சொல்லலாம்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சின்னத்திரை பிரபலங்களில் ரோஷினியும் ஒருவர். அவ்வப்போது அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அன்றாட தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

Image
ரோஷினி ஹரிப்ரியன்

அந்த வகையில், நேற்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்று அவர் நடமாடியுள்ளார்.

Image
ரோஷினி ஹரிப்ரியன்

'நாங்க வேற மாறி' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு மாஸான குத்தாட்டம் போட்ட வீடியோவை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதோடு இணைய பக்கங்களிலும் வைரலாகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Entertainment News Tamil Valimai Vijay Tv Roshni Hari Priyan Bharathi Kannamma Serial Vijay Tv Serial 2 Vijay Tv Cook With Comali
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment