Advertisment

Most Played Song: ரஜினியை பின்னுக்குத் தள்ளிய தனுஷ்!

அமேசான் ப்ரைமில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றிருக்கிறது. 

author-image
WebDesk
Apr 22, 2019 13:06 IST
New Update
rowdy baby, ரவுடி பேபி

rowdy baby, ரவுடி பேபி

Most Played Song: நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த டிசம்பரில் மாரி 2 திரைப்படம் வெளியானது.

Advertisment

இதில் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உட்பட பலர் நடித்திருந்தார்கள்.

படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. மாரி 2 திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘ரவுடி பேபி’ பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக யூ-ட்யூபில் வெளியான இதன் வீடியோ பாடல் 350 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்தது.

Rowdy Baby அமேசான் ப்ரைமில் அதிகம் கேட்கப்பட்ட ‘ரவுடி பேபி’ பாடல்

இந்நிலையில் தற்போது அமேசான் ப்ரைமில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றிருக்கிறது.

மொத்தம் 50 பாடல்கள் கொண்ட அந்தப் பட்டியலில் முதலிடத்தில் ரவுடி பேபி, இரண்டாம் இடத்தில் ’பேட்ட’ திரைப்படத்தின் மரணமாஸ், மூன்றாமிடத்தில் ’96’ திரைப்படத்தின் காதலே காதலே ஆகியப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

 

#Dhanush #Yuvan Shankar Raja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment