scorecardresearch

சாஹோ படத்தை சில மணி நேரங்களில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்: படக்குழு அதிர்ச்சி

Sahoo Movie Tamil Rockers: நாயகி ஷ்ரதா கபூர் இன்று காலை தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘சாஹோ படத்தை பைரசி வெப்சைட்களில் பார்க்க வேண்டாம்’ என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.

saaho tamil movie download tamilrockers, saaho full movie download, சாஹோ, தமிழ் ராக்கர்ஸ்
saaho tamil movie download tamilrockers, saaho full movie download, சாஹோ, தமிழ் ராக்கர்ஸ்

Saaho Full Movie Leaked To Free Download In Tamilrockers: பாகுபலி புகழ் பிரபாஸ் நடிப்பில் இன்று வெளியான சாஹோ திரைப்படத்தை சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.


பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரபாஸ் நடித்திருக்கும் படம் சாஹோ. இயக்குநர் சுஜீத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலாபதி தயாரித்துள்ளனர். இதில் பிரபாஸுடன் ஷ்ரதா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, இன்று இப்படம் வெளியானது.

படம் வெளியான சில மணி நேரங்களில் இந்தப் படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக முழுமையாக வெளியிட்டது. பெரும் பொருட் செலவில் தயாரான இந்தப் படம், பெரிய அளவில் வசூல் ஈட்டினால் மட்டுமே தயாரிப்பாளர் தாக்குப் பிடிக்க முடியும். இந்த நிலையில் படத்தை திருட்டுத்தனமாக தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டதால் வசூல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

படத்தின் நாயகி ஷ்ரதா கபூர் இன்று காலை தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘சாஹோ படத்தை பைரசி வெப்சைட்களில் பார்க்க வேண்டாம்’ என ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்திருந்தார். அடுத்த சில மணி நேரங்களில் படம் திருட்டுத்தனமாக பைரசி வெப்சைட்டில் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Saaho movie download tamilrockers prabhas and shraddha kapoor

Best of Express