ஜோதிகாவுடன் போட்டிபோடும் சாய் பல்லவி

ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படமும், சாய் பல்லவி முதன்முதலாக தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படமும் ஒரே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.

naachiyaar
naachiyaar

ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படமும், சாய் பல்லவி முதன்முதலாக தமிழில் அறிமுகமாகும் ‘கரு’ படமும் ஒரே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாய் பல்லவி. அந்த ஒரு படத்திலேயே மலர் டீச்சராக இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார். தொடர்ந்து ‘களி’ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தவர், ‘ஃபிடா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அந்தப் படமும் வெற்றிபெற, நானி ஜோடியாக ‘எம்சிஏ’ படத்திலும் நடித்தார்.

தமிழில் விஜய் இயக்கத்தில் ‘கரு’ படத்தில் நடித்துள்ளார் சாய் பல்லவி. இதுதான் அவருக்கு முதல் தமிழ்ப்படம். இந்தப் படத்தில் நாக செளரியா, ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், பிப்ரவரி 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ஜோதிகா நடித்துள்ள ‘நாச்சியார்’ படமும் அதே தேதியில் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா தயாரித்து இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் ராக்லைன் வெங்கடேஷ் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாலாவின் சினிமா வாழ்க்கையில், மிக குறுகிய காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம் இது. இந்த இரண்டு படங்களும் ரிலீஸாகும் அதே தேதியில், ஜீவா, நிக்கி கல்ரானி, அனைக்கா நடித்துள்ள ‘கீ’ படமும் ரிலீஸாக இருக்கிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sai pallavi competition for jyothika

Next Story
குடியரசு தினத்தைக் குறிவைக்கும் தமிழ்ப் படங்கள்kalakalappu 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express