Advertisment

சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி?

சூர்யாவின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தை, செல்வராகவன் இயக்குகிறார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sai-Pallavi

Sai-Pallavi

சூர்யாவின் அடுத்த படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தை, செல்வராகவன் இயக்குகிறார்.

Advertisment

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்துள்ளார் சூர்யா. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தை, ‘அருவி’ படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தையும் இந்த நிறுவனம் தான் தயாரித்தது. இந்தப் படத்தின் புரமோஷன் சமயத்தில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்த ரகுல் ப்ரீத்சிங், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது ‘பிரேமம்’ மூலம் பலரைக் கவர்ந்த சாய் பல்லவி, சூர்யா ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜய் இயக்கியுள்ள ‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் சாய் பல்லவி. இந்தப் படம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தொடர்ந்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக ‘மாரி 2’ படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தான், சூர்யா ஜோடியாகவும் அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், செல்வராகவன் இயக்கப் போகும் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்றும், ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி இருவரும்தான் அந்த ஹீரோயின்கள் என்றும் சிலர் கூறுகின்றனர்.

Actor Suriya Sai Pallavi Selvaraghavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment