‘நடந்தா நடக்கட்டும்... நடக்காட்டி போகட்டும்’ - திருமணம் பற்றி சல்மான் கான்

‘திருமணம் நடந்தா நடக்கட்டும்... நடக்காட்டி போகட்டும். இப்போ நான் சந்தோஷமா இருக்கேன்’ எனத் தெரிவித்துள்ளார் சல்மான் கான்.

‘திருமணம் நடந்தா நடக்கட்டும்… நடக்காட்டி போகட்டும். இப்போ நான் சந்தோஷமா இருக்கேன்’ எனத் தெரிவித்துள்ளார் சல்மான் கான்.

பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கானுக்கு தற்போது 51 வயதாகிறது. அடுத்த மாதம் வந்தால் 52 வயதாகிவிடும். இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார் சல்மான் கான். அவருடைய திருமணத்தைப் பற்றி எப்போது பேச்சு எழுந்தாலும், அது இந்தியா முழுவதும் டிரெண்டாகிவிடும்.

ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைஃப், சங்கீதா பிஜ்லானி, சோமி அலி என சில நடிகைகளுடன் காதலில் இருந்தவர் சல்மான் கான். ஆனால், தற்போது தனியாகத்தான் இருக்கிறார்.

இந்நிலையில், திருமணம் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. “எல்லோரும் என்னுடைய திருமணம் குறித்து அக்கறையாய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், என்னிடம் அதற்கான பதில் இல்லை. நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். நடந்தால் நடக்கட்டும்… நடக்காட்டி போகட்டும். உண்மையிலேயே நான் இப்போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்” என்று அந்தக் கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் சல்மான் கான்.

சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு, அடுத்த மாதம் 22ஆம் தேதி ‘டைகர் ஜிந்தா ஹாய்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் சல்மான் கான் ஜோடியாக கத்ரினா கைஃப் நடித்துள்ளார்.

×Close
×Close