‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்கும் ‘விக்ரம் வேதா’ இசையமைப்பாளர்?

‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ajith, diwali

‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்துக்கு இசையமைக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

Advertisment

மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் - காயத்ரி இயக்கிய இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் வெளியான ‘புரியாத புதிர்’ படத்துக்கு இசையமைத்துள்ள சாம், ‘பிரேமம்’ சாய் பல்லவி தமிழில் அறிமுகமாக இருக்கும் ‘கரு’ படத்துக்கும் இசையமைத்துள்ளார். விஜய் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிப்ரவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

‘கரு’ படத்தில் சாம்.சி.எஸ்.ஸின் இசை பிடித்துப்போக, தான் இயக்கப் போகும் அடுத்த படத்திலும் அவரையே இசையமைப்பாளராக்கிவிட்டார் விஜய். ‘தேவி’ படத்துக்குப் பிறகு விஜய் - பிரபுதேவா இருவரும் இணையும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். டான்ஸை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தில், 12 பாடல்கள் இடம்பெறுகின்றன.

Advertisment
Advertisements

இந்நிலையில், அஜித் நடிக்கவுள்ள ‘விஸ்வாசம்’ படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கப் போகிறார் என்கிறார்கள். கடந்த இரண்டு படங்களுக்கு இசையமைத்த அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்த நிலையில், சம்பளம் கட்டுப்படி ஆகாமல் அவரும் விலகிவிட்டார் என்கிறார்கள். எனவே, சாம் சி.எஸ். தான் இசையமைப்பது உறுதி என்கிறார்கள்.

Sam Cs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: