விஜய் சேதுபதி படத்தில் இணைந்த சமந்தா : பூச்செண்டு கொடுத்து வரவேற்ற இயக்குநர்

தமிழில் சிம்பு வரலட்சுமி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தை தொடர்ந்து  விஜய் சேதுபதி நயன்தாராவை இவர் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பிறகு படங்கள் இயக்காமல் இருந்த விக்னேஷ் சிவன், 5 வருட இடைவெளிக்குபிறகு தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்க தயாராகியுள்ளார். ஏற்கனவே இந்த […]

தமிழில் சிம்பு வரலட்சுமி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகவர் விக்னேஷ் சிவன். இந்த படத்தை தொடர்ந்து  விஜய் சேதுபதி நயன்தாராவை இவர் இயக்கிய நானும் ரவுடிதான் என்ற படம் தமிழ் சினிமாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு படங்கள் இயக்காமல் இருந்த விக்னேஷ் சிவன், 5 வருட இடைவெளிக்குபிறகு தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்க தயாராகியுள்ளார். ஏற்கனவே இந்த படம் அறிவிக்கப்பட்ட படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுதுதல் காரணமாக இந்த படத்தின் பூஜை தள்ளிப்போனது.

தற்போது கொரோன தாக்கம் குறைந்து படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, கடந்த வாரம் இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் நாயகனாக நடிக்கும் விஜய் சேதுபதி மட்டும் இந்த பூஜையில் கலந்துகொண்டார். காதல் காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா சமந்தா நாயகிகளாக நடிக்க உள்ளனர்.

இந்நிலையில், இந்த படத்தின் பூஜையில் கலந்துகொள்ளாத நடிகை சமந்த தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிரமில் வீடியோ வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன், சமந்தாவுக்கு பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.

இந்த வீடியோவில், ஷூட்க்கு சமந்தா தயாராகி வருகிறார். அவரை பூச்செண்டு கொடுத்து வரவேற்கும், விக்னேஷ் சிவன் 10 நிமிடங்களில் தயாராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு (செவ்வாய் கிழமை) விஜய் சேதுபதி இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்தார். இது குறித்து வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட விக்னேஷ் அவரையும், ஒரு பூச்செண்டுடன் வரவேற்றார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது விஜய் சேதுபதி சமந்தா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், மற்றொரு நாயகியான நயன்தாரா விரைவில் படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி மற்றும் சமந்தா இருவரும் ஏற்கனவே சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் அந்த படத்தில் இருவரும் ஒன்றாக வரும் கட்சிகள் இல்லை. தற்போது 2-வது முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இயக்குனராக விக்னேஷ் சிவன் இயக்கும் நான்காவது படம் (சமீபத்தில் நெட்ஃபிக்ஸ் வெளியான பாவா கதைகள் படத்தின் ஒரு பகுதியை இயக்கியிருந்தார்) இதுவாகும்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samantha join to kaththu vaakula rendu kathal movie shooting welcome vignesh sivan

Next Story
வி.ஜே சித்ராவின் கடைசி தருணங்கள் : வீடியோ வெளியிட்ட விஜய் டிவி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express