சமந்தா - நாக சைதன்யா திருமண வரவேற்பில் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், ஹைதராபாத் களைகட்டப் போகிறது.
கெளதம் மேனன் இயக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘யே மாய செசாவே’ படத்தில் முதன்முதலாக இணைந்து நடித்தனர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், சமந்தாவும். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து, கேரக்டர்களாகவே வாழ்ந்தனர்.
சமந்தா - நாக சைதன்யா காதல், 8 வருடங்களுக்குப் பிறகு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. இந்த வருட தொடக்கத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த மாதம் (அக்டோபர்) 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெற்றது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இவர்கள் நிச்சயதார்த்தம் வருகிற 12ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா, அவர் மனைவி அமலா இருவரும் பிரபல நடிகர்கள் என்பதால், தென்னிந்தியாவைச் சேர்ந்த 4 மொழி சினிமாத்துறையினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.
அத்துடன், தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் இந்த திருமண வரவேற்பில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இதனால், ஹைதராபாத் நகரமே களைகட்ட இருக்கிறது. அத்துடன், இவர்களின் வருகையால் அன்றைய தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.