நடிகர் நாகர்ஜூனா ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்துள்ள நிலையில், அதற்கு போட்டியாக மற்றொரு முன்னணி சோப்பு வர்த்தக நிறுவனம், அவரது மருமகளான நடிகை சமந்தாவை களமிறக்கியுள்ளது.
ஒரு முன்னணி சோப்பு விளம்பரத்தில், நடிகர் நாகர்ஜூனா அந்த சோப்பை பயன்படுத்துமாறு பேசுகிறார். ஏனெனில், இந்த சோப் லேபரேட்டரியில் சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளதாக அதில் அவர் தெரிவிக்கிறார். முதலில் பயன்படுத்துங்கள் ; பிறகு நம்புவீர்கள் என்றும் நாகர்ஜூனா பேசுகிறார். இந்த விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், போட்டி நிறுவனமான மற்றொரு சோப்பு வர்த்தக நிறுவனம் நாகர்ஜூனாவின் மருமகளான நடிகை சமந்தாவை, அந்த விளம்பரத்தில் நடிக்க வைத்துள்ளனர். அந்த விளம்பரத்தில், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் தான் சோப்பை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய சோப்பை, லேபரேட்டரியில் பயன்படுத்துவாங்களாம், அதை நாம் நம்பணுமாம் என்று சமந்தா சொல்வதுபோல அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மாமனார் - மருமகள் உறவை, தங்கள் வர்த்தக யுக்திக்காக இந்த வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்வதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.