Advertisment

கடந்த ஆறு மாதங்கள் "கடினமானவை"; சிகிச்சையில் இருக்கும் சமந்தா உருக்கமான பதிவு

சமந்தா ஒரு வருட நடிப்பு இடைவெளியை அறிவித்த பிறகு பதிவிட்ட ரகசிய இடுகை; கடந்த ஆறு மாதங்கள் 'கடினமானவை'

author-image
WebDesk
New Update
Samantha

சமந்தா (புகைப்படம்: இன்ஸ்டாகிராம்)

நடிப்பிலிருந்து ஒரு வருட இடைவெளியை அறிவித்த பிறகு, சமந்தா ரூத் பிரபு இன்ஸ்டாகிராமில் ஒரு ரகசிய பதிவைப் பகிர்ந்து கொண்டார், கடந்த ஆறு மாதங்கள் "கடினமானவை" என்று பதிவிட்டுள்ளார். சமந்தா சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் தனது வரவிருக்கும் குஷி படத்தை முடித்தார்.

Advertisment

சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் செல்ஃபியைப் பகிர்ந்து கொண்டார். அந்த புகைப்படத்தில் சிரித்தவாறு இருக்கும் சமந்தா மேக்கப் இல்லாமல் தோன்றினார். மேலும், "மிக நீண்ட மற்றும் கடினமான ஆறு மாதங்கள்... விரைவில் முடிவுக்கு வரவுள்ளது," என்று சமந்தா பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்: சர்வதேச விழா: உதயநிதி படத்திற்கு 3 விருதுகள்; சிறந்த நடிகை தமன்னா

publive-image

இந்தநிலையில், சமந்தா இன்று மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். முகக்கவசம் மற்றும் தொப்பியால் முகத்தை மறைத்தவாறு செல்லும் சமந்தாவின் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

தசைகளை பாதித்து கடுமையான வலியை உண்டாக்கும் மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரது மேனேஜர் மகேந்திரா, நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து, அதற்கான சிகிச்சையை சமந்தா பெற்று வருகிறார் என indianexpress.com இடம் கூறினார்.

மேலும், “சமந்தா தனது தன்னுடல் தாக்க நிலையான மயோசிடிஸ் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதால், ஒரு வருடத்திற்கு புதிய படங்கள் எதிலும் கமிட் ஆக மாட்டார் என்பது உண்மைதான். எதிர்பார்த்ததை விட அவரது உடல்நிலை மேம்பட்டால், ஆறு மாதங்களுக்குள் அவர் திரும்பலாம். இருப்பினும், அவரது இடைவேளையின் திட்டமிடப்பட்ட காலம் ஒரு வருடம். அவர் ஏற்கனவே குணமடைவதில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறார், மேலும் அவரது மருத்துவர்கள் கட்டாய ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆகஸ்ட் நான்காவது வாரத்தில் (ஆக. 20) சமந்தா அமெரிக்கா செல்கிறார்.” என்றும் மகேந்திரா கூறினார்.

குஷி படத்தைத் தவிர, அமேசான் பிரைம் வீடியோ வலைத் தொடரான ​​சிட்டாடலின் இந்திய பகுதிகளிலும் சமந்தா நடித்துள்ளார். டைமெரி என் முராரியின் 2004 ஆம் ஆண்டு அதிகம் விற்பனையான தி அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் நாவலின் தழுவலான சென்னை ஸ்டோரி என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Samantha Ruth Prabhu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment