சசிகுமார் - சமுத்திரக்கனி மீண்டும் இணையும் ‘நாடோடிகள் 2’

சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

சசிகுமார் நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் ‘நாடோடிகள்’. சமுத்திரக்கனி இயக்கிய இந்தப் படத்தில், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், லட்சுமி ராமகிருஷ்ணன், நமோ நாராயணன் ஆகியோர் நடித்திருந்தனர். குளோபல் இன்ஃபோடெய்ன்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, சுந்தர் சி பாபு இசையமைத்திருந்தார். காதலர்களைச் சேர்த்து வைக்கும் நண்பர்களைப் பற்றிய படம் இது. ஃபிலிம்பேர் விருது, விஜய் அவார்ட்ஸ், எடிசன் விருது, மிர்ச்சி மியூஸிக் அவார்ட் என பல விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.

கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு, ‘நாடோடிகள்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. சமுத்திரக்கனி இயக்க, சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி கலை இயக்குநராகப் பணியாற்ற, ஏ.எல்.ரமேஷ் எடிட் செய்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர் – நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனியின் நாடோடிகள் மற்றும் இன்ஸ்ஃபைர் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

×Close
×Close