Advertisment

சஞ்சிதா ஷெட்டிக்கு எப்படியாப்பட்ட முதல் அனுபவம் கிடைச்சிருக்குன்னு பார்த்தீங்களா...

மறுநாள் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், முதல்நாள் போன் பண்ணி சஞ்சிதாவிடம் கேட்டிருக்கிறார் தியாகராஜன்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
சஞ்சிதா ஷெட்டிக்கு எப்படியாப்பட்ட முதல் அனுபவம் கிடைச்சிருக்குன்னு பார்த்தீங்களா...

‘சாகசம்’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் படம் ‘ஜானி’. பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப் படத்தை, வெற்றிச்செல்வன் என்பவர் இயக்கி அறிமுகமாகிறார். எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் இவர். ‘எமன்’ படத்தில் தியாகராஜன் நடித்தபோது, இவரின் திறமையைக் கண்டு வியந்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கிறார் தியாகராஜன்.

இந்தப் படத்தில், ஹீரோயினாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். இவர் இந்தப் படத்தில் கமிட்டான விஷயத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும். மறுநாள் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், முதல்நாள் போன் பண்ணி சஞ்சிதாவிடம் கேட்டிருக்கிறார் தியாகராஜன். அவர் சொன்ன கதை சஞ்சிதாவுக்குப் பிடித்துவிட, இரவோடு இரவாக அவருக்கான உடைகளை வாங்கி மறுநாள் ஷூட்டிங் நடத்தியிருக்கிறார்கள். ‘இப்படி ஒரு படத்தில் கமிட்டானது இதுதான் முதல்முறை’ என்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

‘ஜானி கட்டார்’ என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு வெளியான ஹிந்திப் படத்தின் ரீமேக் இது. இந்தப் படத்தில் தர்மேந்திரா, நீல்நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படத்தில், இதுவரை நடிக்காத வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறாராம் பிரசாந்த். அவர் மட்டுமல்ல, படத்தில் நடித்திருக்கும் பிரபு, ஆனந்தராஜ், சாயாஜி ஷிண்டே உள்பட எல்லோருமே இதுவரை நடிக்காத கேரக்டரில் நடித்திருக்கிறார்களாம்.

Tamil Cinema Sanchita Shetty
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment