‘சண்டக்கோழி 2’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எம்.ஜி.ஆருக்கு மரியாதை

எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சண்டக்கோழி 2’. ஏற்கெனவே ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகமாக இது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த மீரா ஜாஸ்மின் இரண்டாம் பாகத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரண், இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், கஞ்சா கருப்பு, ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ், ‘கபாலி’ விஸ்வநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்துள்ளது. இதுவரை சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பு, இனி திண்டுக்கல்லில் நடைபெற இருக்கிறது.

சென்னையில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில், எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருடைய உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் விஷால், ராஜ்கிரண், லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

×Close
×Close