Advertisment

விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஓர் வருத்தமான செய்தி...

Vijay Sethupathi: விஜய் சேதுபதியுடன், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sangathamizhan Vijay Sethupathi

Sangathamizhan Vijay Sethupathi

Diwali Release: இந்த தீபாவளி பண்டிகைக்கு, மூன்று முக்கியப் படங்கள் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் ’பிகில்’, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் கார்த்தியின் ’கைதி’, விஜய் சந்தர் இயக்கியிருக்கும் விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ ஆகியப் படங்கள் தீபாவளிக்கு வெளியாகவிருந்தன.

Advertisment

இதில், முன்னதாக விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ திரைப்படம், தனுஷின் ‘அசுரன்’ படத்தோடு அக்டோபர் 4-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தீபாவளிக்கு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் உறுதிப் படுத்தப்பட்ட தகவலின் படி, இப்படம் தீபாவளிக்கும் வெளியாவதில்லை என்று தெரிகிறது.

விஜய் சேதுபதியுடன், நிவேதா பெத்துராஜ் மற்றும் ராஷி கண்ணா நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷனின் ரவீந்தர் சந்திர சேகர் வாங்கியிருக்கிறார். படம் சில நிதி பிரச்னைகளில் சிக்கியிருப்பதாகவும், அதனை சரிசெய்து விட்டு, நவம்பர் 8 அல்லது 15 ஆகிய தேதிகளில் இப்படம் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment