New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/santhanam.jpg)
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்குகிறது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்குகிறது.
முன்னணி காமெடியனாகத் திகழ்ந்த சந்தானம், ஒருகட்டத்தில் ஹீரோவானார். அவர் ஹீரோவாக நடித்த படங்கள் சுமாராக ஓடுவதால், தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வருகிறார். ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சக்க போடு போடு ராஜா’ என கைவசம் 4 படங்களை வைத்திருக்கிறார்.
இந்நிலையில், ஐந்தாவதாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார். இதன் படப்பிடிப்பு, அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. எம்.ராஜேஷ் இதுவரை இயக்கிய 6 படங்களில், 5 படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார் சந்தானம். தற்போது அவர் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்துக்குப் பிறகு, சந்தானம் - எம்.ராஜேஷ் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறது தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட். முழுக்க முழுக்க காமெடிப் படமாக இது உருவாகிறது. ஆனால், எம்.ராஜேஷ் இயக்கிய முந்தைய படங்களின் சாயலை இதில் பார்க்க முடியாது என்கிறார்கள். அந்த அளவுக்கு புத்தம்புதிய கதையுடன் களமிறங்கியிருக்கிறார் எம்.ராஜேஷ்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.