scorecardresearch

யாருக்கு ” அள்ளிக்கோ அள்ளிக்கோ” அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதோ….

Saravana store Annachi : சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் இருக்கோ….என்பதுதான் தற்போது கோலிவுட்டில் பெரும்விவாதமாக உள்ளது.

annachi arul,nayanthara,vignesh sivan,j.d-jerry
annachi arul,nayanthara,vignesh sivan,j.d-jerry, சரவணா ஸ்டோர்ஸ், அண்ணாச்சி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஜேடி ஜெர்ரி

அள்ளிக்கோ அள்ளிக்கோ என அனைத்து வீடுகள் மட்டுமல்லாது டிவிக்கள் உள்ள இடங்களில் எல்லாம் அல்லு விட்டுக்கொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடிக்க எந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் இருக்கோ….என்பதுதான் தற்போது கோலிவுட்டில் பெரும்விவாதமாக உள்ளது.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் என்றால் அதுகுறித்த கொண்டாட்டம் துவங்குவதற்கு முன்பாகவே, டிவிக்களில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் அட்டகாச விளம்பரம் பின்னி பெடலெடுக்க துவங்கிவிடும். அந்தளவுக்கு சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு விளம்பரங்களில் நடிப்பது என்றால் கொள்ளை ஆசை.

இந்த ஆசை, அவரை சினிமாவிலும் நடிக்க தூண்டியது. தங்களது நிறுவனத்துக்கு விளம்பர படங்களை எடுத்துதரும் இயக்குநர்களான ஜேடி ஜெர்ரியிடம் ரூ.50 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்துத்தர அண்ணாச்சி கேட்டிருந்தார்.

அவர்களும் சரி என்று சொல்ல, படத்தின் ஹீரோயினை தேடும் படலம் துவங்கியது. நயன்தாராவுடன் நடித்துவிட வேண்டும் என்ற அண்ணாச்சியின் ஆசை வெளியுலகத்துக்கு தெரியவந்தது. உடனடியாக, ஜேடி ஜெர்ரி, விக்னேஷ் சிவனை அணுகினர். நயன்தாரா, இதை காமெடி என்று நினைத்து சிங்கிள் பேமெண்ட் 10 கோடி என்று கூறியிருந்தார்.

அசராத அண்ணாச்சி ஓகே என்று சொல்ல,பதைபதைத்த நயன்தாரா, எனக்கு இப்போது கைவசம் 7 படங்கள் உள்ளதால், இப்போதைக்கு முடியாது என்று நழுவிவிட்டார்.படக்குழு, தமன்னா, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்டோரை அணுக திட்டமிட்டுள்ளது.

யாருக்கு அள்ளிக்கோ அள்ளிக்கோ அதிர்ஷடம் அடிக்கப்போகுதோ என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Saravana stores annachi nayanthara movie