கேரவன் மினி: இளையராஜா முதல் ரகுமான் வரை இனி உங்கள் கைகளில்

பேட்டரி தீர்ந்து விடும் என்ற கவலையும் இல்லை; ஏனேனில் இது ஐந்து மணி நேரம் back-up வசதி கொண்ட பேட்டரியுடன் வருகிறது.

Saregama launches Carvaan mini: புகழ் பெற்ற சரிகம நிறுவனம் தற்பொழுது ‘கேரவன் மினி’ என்ற இசை கருவியை பிரத்யேகமாக தமிழ் இசைப்பிரியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த கருவியில் ஏற்கனவே இசை மேதைகள் எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ரகுமான் போன்றோர் இசையமைத்த 351 பாடல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து BLUETOOTH, USB , F.M, A.M போன்ற பல்வேறு வசதிகளும் இதில் உள்ளன.

இந்த கருவியை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் விதத்தில் இது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு பேட்டரி தீர்ந்து விடும் என்ற கவலையும் இல்லை; ஏனேனில் இது ஐந்து மணி நேரம் back-up வசதி கொண்ட பேட்டரியுடன் வருகிறது. அதை தவிர்த்து,ஆறு மாத கால வாரன்டியும் இதில் உள்ளது.

இதன் அறிமுக விழாவில் பேசிய சரிகம நிர்வாக இயக்குனர் விக்ரம் மேரா, “கேரவன் இசை கருவி விற்பனை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. அதனை தமிழில் முயற்சி செய்தோம் அது மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வெற்றி தந்த ஊக்கத்தின் பேரில் தான் தமிழ் ரசிகர்களுக்கு என்று பிரத்யேகமாக இந்த ‘மினி போர்டல்’ இசை கருவியை நாங்கள் தயாரிக்க முடிவு செய்தோம். இந்த முயற்சியும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்,” என்று கூறினார்.

சரி, இந்த சரிகம என்றால் என்ன?

The Gramophone Company என்று முன்பு அறியப்பட்ட சரிகம நிறுவனம் இந்தியாவின் தொன்மையான மற்றும் உலகின் மிகப்பெரிய இசை காப்பகங்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவில் இதுவரை நடந்த 50 சதவீத இசை நிகழ்வுகளின் உரிமைகளை சரிகம நிறுவனம் கொண்டுள்ளது. அந்த அளவிற்கு இந்தியாவின் இசை பாரம்பரிய களஞ்சியமாக சரிகம உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close