Advertisment

கசிந்தது சர்கார் படம் கதை! அதிர்ச்சியில் படக்குழுவினர்!!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sarkar movie, சர்கார் படம்

sarkar movie, சர்கார் படம்

இயக்குனர் ஏ. ஆர். முருதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை லீக் ஆகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Advertisment

சர்கார் கதை லீக்:

பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் மற்றும் மர்மங்களுடன் உருவாகிவரும் சர்கார் படத்தில், விஜய் தோற்றம் முதல் கதை, பாடல் என அனைத்தும் ரகசியமாகவே காக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த பாடல் ஷூட்டிங் வீடியோ ஒன்று லீக் ஆனது. இதனால் மன வருத்தத்தில் இருந்த படக்குழுவினர் இது போல் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், தற்போது படத்தின் கதை வெளியாகியுள்ளது மேலும் அதிர்ச்சியை கூட்டியுள்ளது. இப்படத்தில், உலக அளவில் பெரிய தொழிலதிபராக விஜய் நடிக்கிறார். அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிறார். அப்போது வாக்களர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெறாததைக் கண்டு கோபமடையும் விஜய் இதுகுறித்து விசாரிக்கும் போது எல்லோரும் அலட்சியம் காட்டுகின்றனர்.

பின்பு விஜய்யே களத்தில் இறங்கி இதற்கென வேலைப்பார்ப்பது தான் திரைப்படம் என்ற தகவல் வெளியாகிவுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment