Advertisment

சசிகுமார் நடிக்கும் ‘அசுர வதம்’

மருது பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இந்தப் படத்துக்கு, ‘அசுர வதம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasi kumar, marudhu pandian

சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு, ‘அசுர வதம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான சசிகுமார், அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்துள்ளார். ஆனால், பெரும்பாலும் அவை தோல்விப் படங்களாக மட்டுமே அமைந்துள்ளன.

தன்னை வைத்து ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில், ‘கொடிவீரன்’ என்ற படத்தில் தற்போது நடித்துள்ளார் சசிகுமார். பூர்ணா, சனுஷா, மகிமா நம்பியார் என மூன்று ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இதில், சசிகுமாருக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்க, சசியின் தங்கையாக சனுஷா நடித்துள்ளார். வில்லியாக நடித்துள்ள பூர்ணா, இந்தப் படத்துக்காக ஒரிஜினலாகவே மொட்டை போட்டு நடித்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மருது பாண்டியன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் சசிகுமார். இந்தப் படத்துக்கு, ‘அசுர வதம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ என்ற படத்தை இயக்கிய மருது பாண்டியன், இரண்டாவதாக இயக்கும் படம் இது. ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில் லீனா லலித்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

Tamil Cinema Sasikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment