“சதுரங்க வேட்டை-2” ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியீடு!

சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட, “சதுரங்க வேட்டை-2” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அரவிந்த் சாமியின் சதுரங்க வேட்டை-2 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘சதுரங்க வேட்டை ’ முதல் பாகத்தை இயக்கிய H.வினோத், அதன் இரண்டாம் பாகத்திற்கு கதை – திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார், ‘சலீம்’ புகழ் NV.நிர்மல் குமார் ‘சதுரங்க வேட்டை-2’ படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் சாமிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இப்படத்தில், நாசர், பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், படக்குழுவால் வெளியிடப்பட்ட, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். இதனால், ‘சதுரங்க வேட்டை-2’ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close