scorecardresearch

விழுந்தார்… எழுந்தார்… நிமிர்ந்தார்..! ஆயிஷா ஸ்பெஷல் பேட்டி

Tamil Indian Express in conversion with Zee Tamil’s Sathya serial actress Ayesha Tamil News: சத்யா சீரியல் நடிகை ஆயிஷா ‘தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணையத்திற்கு அளித்துள்ள சிறப்பு பேட்டி.

விழுந்தார்… எழுந்தார்… நிமிர்ந்தார்..! ஆயிஷா ஸ்பெஷல் பேட்டி

Sathya serial actress Ayesha exclusive interview in tamil: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சத்யா’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஆயிஷா. கேரளாவை சேர்ந்த இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பொன்மகள் வந்தாள்’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியலில் நடிக்கும்போது இயக்குநருடன் ஏற்பட்ட மோதலால் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதனால், சில மாதங்கள் பெரிய மன உளைச்சலில் இருந்த அவர், சிறிது காலம் எந்த விதமான வாய்ப்புகள் இன்றியும் இருந்தார்.

இந்த நேரத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பான `மாயா’ சீரியலில் இரு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் தனது தனித்துவமான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி வந்த ஆயிஷாவுக்கு பெரிய ‘ஜாக்பாட்’ என்று சொல்லப்படும் சத்யா சீரியல் வாய்ப்பு கிடைத்தது. எந்த கேரக்டராக இருந்தாலும் துணிச்சலாக நடிக்கும் ஆயிஷா இந்த சீரியலில் டாம்பாய் ஆக நடித்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வழக்கமான சீரியல் தொடர்களில் வரும் கதாநாயகிகளை காட்டிலும் சற்றே வேறுபட்டு ஆண்கள் அணியும் உடையில் படு லோக்கல் பெண்ணாக நடித்திருந்தார் ஆயிஷா. அவரது நடிப்பு அனைத்து வயதினரும் ரசிக்கும் படி இருந்தது. அவருடைய ஸ்டைலான நடிப்பு சீரியல் ரசிகர்களை அவரது பக்கம் திருப்பியது. மேலும், இல்லத்தரசிகளை அதிகம் கவர்ந்த ஜீ தமிழ் சீரியல் சத்யா சீரியல்தான் என்றும் கூறும் அளவிற்கு அவரது நடிப்புத்திறமை இருந்தது. ஆயிஷாவின் சிறப்பான நடிப்பிற்காக ஜீ தமிழ் விருதும் கிடைத்தது.

தற்போது சத்யா சீரியலில் பிசியாக நடித்து வரும் ஆயிஷா, சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் அவ்வப்போது பகிரும் புகைப்படங்கள் வைரலாகி விடுகின்றன. சத்யா சீரியலில் ரவுடி பேபியாக டாம்பாய் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்து வரும் ஆயிஷாவிடம் அலைபேசியில் கலந்துரையாடினோம். அதன் சுருக்கம் பின்வருமாறு:

சின்னத்திரையில் உங்கள் என்ட்ரி எப்படி?

நா முதல்ல விஜய் டிவி ‘ரெடி ஸ்டெடி போ’-ல்ல தான் வந்தேன். அந்த ப்ரோக்ராம்ல நடிச்சத பார்த்துட்டு ஒன் வீக்ல புது ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதுதான் பொன்மகள் வந்தாள்.

ஏன் நீங்க உங்க தாய்மொழில படம் – சீரியல் பண்ணல?

நான் பை ஆக்சிடன்டதான் சின்னத்திரைக்கு நடிக்க வந்தேன். இங்க நல்ல நடிச்சிட்டு இருந்தப்ப, மலையாளத்துல எனக்கு நெறைய ப்ராஜெக்ட் வந்துச்சு. ஆனா எனக்கு தான் கொடுக்க டேட் இல்ல. இங்கயே எனக்கு 24 – 26 நாள் ஷூட் இருக்கும். அதனால என்னால் நடிக்க முடியாம போச்சு. இனிமே வாய்ப்புகள் வந்தால் அங்க நடிக்கிறத பத்தி யோசிக்கலாம்னு இருக்கேன்.

உங்களுக்கு பிடித்தது ட்ராவல். அதில் ஒரு மறக்கமுடியாத அனுபவம் சொல்லமுடிமா?

நான் தனியா மூணாறு போனேன். அந்த ட்ரிப் எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்துச்சு. கொளுக்கு மலை பார்த்தேன். மார்னிங் சன் ரைஸ் பார்த்தேன். அங்க வசிக்கிற மக்கள சந்திச்சு பேசுனேன்.

சன் டிவியின் மாயா சீரியலில் நடித்து இருந்துந்தீர்கள். மீண்டும் சன் டிவி சீரியலில் நடிப்பீர்களா?

மாயா சீரியல் குஷ்பூ மேம் தயாரிப்பு நிறுவனம்னால எனக்கு நடிக்க ரொம்ப புடிச்சு இருந்துச்சு. நம்மள நல்லா ட்ரீட் பண்ணுவாங்க. நாம ஒரு மூவி பண்ணுற உணர்வு இருக்கும். கேமரா டீம்ல இருந்து எல்லாம் நல்ல பழகுவாங்க.

சன் டிவியில மறுபடியும் சீரியல் பண்ணுவானான்னு தெரியல. ஆனா எனக்கு புடிச்ச மாறி ப்ராஜெக்ட் வந்த கண்டிப்பா பண்ணுவேன்.

பொன்மகள் வந்தாள் சீரியலில் இருந்து திடீர் விலகல் ஏன்?

அந்த பிரச்னையைப் பற்றி நா பேச விரும்பல. இப்போ கூட அந்த டைரக்டர பார்த்த நான் பேசுவேன். அவரும் நல்லா பேசுகிறார்.

தமிழ் சினிமாவுல பிடித்த நடிகர்?

எனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி தான். ஆனா நா ஏகே (நடிகர் அஜித்) ரசிகை. அவர் கூட நடிக்க சின்ன சீன் கெடச்சக்கூட போதும்.

சத்யா சீரியலில் டாம்பாய் கேரக்டரில் நடிக்க தொடங்கிய போது உருவ கேலியை சந்தித்தீர்களா?

இந்த கேரக்டரில் நடிக்கும்போது ‘என்னை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், கலாய்ப்பாங்க’ அந்த மாதிரி நினச்சேன். ஆனா இதுவரை யாரும் அந்த மாதிரி கேலி செஞ்சது கிடையாது. அதை நா ஒரு ஆசீர்வாதமா உணர்றேன்.

ஜீ தமிழ் ‘சூப்பர் குயின்’ ரியாலிட்டி ஷோவில் உங்கள் அனுபவம்?

‘சூப்பர் குயின்’ ஷோ சூப்பரா போயிட்டு இருக்கு. எனக்கு இது ஒரு புது அனுபவம். நா இந்த மாதிரியான ஷோல எல்லாம் கலந்துக்கிட்டது கிடையாது. தவிர, நான் ரொம்ப ஜாலி டைப். எனக்கு தெரிஞ்சத நல்லா பண்ணுவேன். தெரியாததா சொதப்புவேன். இப்போ கேம் கொஞ்சம் சீரியசா போயிட்டு இருக்கு. அதலான நானும் சீரிசா விளையாடுவேன். கேம்ல கடைசி வர போவணும்னு ஆசை இருக்கு. பைனல் வர வருவோமானுன்னு பாப்போம்.

உங்க ஒவ்வொருத்தரோட ‘சூப்பர் குயின்’, அதாவது உங்கள் லைஃப்ல இருக்குற சூப்பர் குயின். அது உங்க அம்மா, தங்கச்சி, மனைவி அல்லது பிடித்த பெண் யாரா வேணும்னாலும் இருக்கலாம். அவங்கள பத்தி பேசுனா வீடியோவை இன்ஸ்டாகிராம்லா ‘ஜீ தமிழ்’ டீவியை டேக் பண்ணி ஷேர் பண்ணணும். அதுல 15 முதல் 20 நபர்களை பைனல் அப்போ அழைத்து பாராட்டி கிப்ஃட் கொடுப்போம்.

புதிய ப்ராஜெக்ட்கள் பற்றி சொல்ல முடியுமா?

சின்னத்திரையில் நிறைய வாய்ப்பு வந்துக்கிட்டே இருக்கு. நா இப்போ எதுவும் நடிக்கல. ஆனா. ஓடிடி வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். அதோட டைட்டில் ரிவில் பண்ணுகூடாதுன்னு சொல்லி இருக்காங்க.

சத்யா சீரியலில் ஆயிஷாவுடன் நடித்து வரும் விஷ்ணுவிற்கும் அவருக்கும் காதல், இயக்குநருடன் பிரச்சனை என ஆயிஷா பற்றி பல கிசுகிசுக்கள் இணையத்தில் உலா வந்தாலும், அவர் எதையும் பொருட்படுத்தாது தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தனது சினிமா வாழ்க்கையில் எத்தனை பெரிய கேலிகள், கஷ்டங்களை அவர் அனுபவித்து இருந்தாலும், அதை சுமுகமாக சமாளித்து வரும் சூப்பர் குயினாக, புன்னகை தழுவிய குரலில் பேட்டியை முடித்துக்கொண்டார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sathya serial ayesha tamil news zee tamil serial actress ayesha special interview