சீமானுடன் இணைந்த குஷ்பு

அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் சீமான், குஷ்பு இருவரும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்காக இணைந்துள்ளனர்.

அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் சீமான், குஷ்பு இருவரும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்துக்காக இணைந்துள்ளனர்.

விக்கி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘டிராஃபிக் ராமசாமி’. சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் நடிக்க, அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். அத்துடன், பிரகாஷ் ராஜ், அம்பிகா, எஸ்.வி.சேகர், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

விஜய் ஆண்டனி, சமூக அக்கறையுள்ள நடிகராகவே இந்தப் படத்தில் நடிக்கிறார். அரசியலில் எதிரும், புதிருமாக இருக்கும் சீமான் – குஷ்பு இருவரும் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டரில் இருவரும் நடித்திருக்கிறார்கள் என்கிறார் இயக்குநர் விக்கி.

×Close
×Close