Advertisment

மாமனார் இல்லாத வீட்டில் காதல் : பாக்கியலட்சுமி செழியன் புது அவதாரம்

கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் ஆர்யன் தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாமனார் இல்லாத வீட்டில் காதல் : பாக்கியலட்சுமி செழியன் புது அவதாரம்

தமிழ் திரைத்துறையில் தற்போது சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் சீரியல் நட்சத்திரங்கள் தொலைக்காட்சி வழியாக ரசிகர்களுடன் தினசரி தொடர்பில் உள்ளதும், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருப்பதும் தான்.

Advertisment

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் ஆரியன். தமிழகத்தில் பிறந்த இவர், தனது கடந்த 2019-ம் ஆண்டு தென்னிந்திய அளவில் மாடலிங்கில் சாம்பியன் பட்டம் வென்றவர். இதுவே அவரின் சின்னத்திரை என்ட்ரிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆர்யன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து வரும் ஆர்யன் தற்போது ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

publive-image

இது தொடர்பான நேர்காணலுக்காக அவரை தொடர்பு கொண்டபோது...

கேள்வி : சிறுவயதில் இருந்து உங்களது வாழ்ககையின் நோக்கம் என்னவாக இருந்தது இப்போது அது நிறைவேறியுள்ளதா?

பதில் : சிறுவயதில் இருந்து எனக்கு எந்த நோக்கமும் இருந்தது இல்லை. 25 வயது வரை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அதன்பிறகு நீங்கள் நிரந்தராமாக ஒரு வேலை செய்யும்போது நன்றாக இருக்கும் என்று அலிபாபா குழுமத்தின் சி.இ.ஓ சொன்னது போலதான் எனக்கு நடந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் இதுவும் நிரந்தரமா என்பது தெரியவில்லை.

அவர் சொன்னது என் வாழ்கையில் சரியாகவும் இருந்தது. எனது வேலையும் மாறிக்கொண்டே இருந்தது. 3 வருடங்களுக்கு முன்புதான் திரைத்துறைக்கு வந்தேன். ஆனாலும் இதுவும் நிரந்தரமா என்பது தெரியவில்லை. அப்படியே போக்கிட்டு இருக்கு.

கேள்வி : 2019 –ல் தென்னிந்திய மாடல் பட்டம் வென்ற தருணம் பற்றி

பதில் : இதுவும் ஒரு எதேர்ச்சையாக நடந்த ஒன்றுதான். நான் ஜிம்மில் வொர்க்அவுட் செய்துகொண்டிருக்கும்போது, என் நண்பர்கள் இப்போ லுக் நல்லாருக்குடா நல்ல பாடி வச்சிருக்கியே ஏன் சௌத் இந்தியா மாடல் போட்டியில் கலந்துகொள்ள கூடாதுனு கேட்டாங்க.

அப்போவே கூச்சபட்டுக்கிட்டு நாம போய் என்ன பண்ண போறோம்னு நினைச்சு நான் அந்த போட்டிக்கு போகாம இருக்கனும்னு எவ்வளவோ ட்ரை பண்ண. ஆனா நண்பர்கள் வலுக்கட்டாயமாக காரில் அழைச்சிட்டு போனாங்க. அப்போ நான் சரியான ட்ரெஸ் கூட எடுத்துகிட்டு போகல.

அங்க உள்ளே போனதுக்கபுறம் பார்த்த என்ன சலெக்ட் பண்ணிட்டாங்க என் நண்பன சலெக்ட் பண்ணல. என் நண்பன் ட்ரெஸ் வாங்கி போட்டுகிட்டு அப்புறம்தான் ஃபைனல்க்கு போனேன். கடவுளின் ஆசீர்வாதத்தால் வின் பண்ணிட்டேன். எனக்கு கிடைக்கனும்னு இருந்துருக்கு கிடைச்சிடுச்சி. நான் பெருசா எதிர்பார்க்கல.

என்ன விட பெட்டரான ஆட்கள் நிறைபேர் இருக்காங்களே ஆன நமக்கு கிடைச்சிருக்கே இதுக்கு சமமா எதாவது பண்ணணுமே என்றுதான் நான் ஹானஸ்டா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். டைட்டிலுக்கு தகுதியானவன் என்ற பெயரை எடுக்க நான் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

publive-image

கேள்வி : முதல் சீரியல் கடைக்குட்டி சிங்கம் வாய்ப்பு?

பதில் : என் ப்ரண்ட்ஸ் யாரோ விஜய் டிவிக்கு என் போட்டோ அனுப்பிருந்தாங்க. கொஞ்சநாள் கழிச்சி விஜய் டிவில இருந்து எனக்கு ஒரு கால் வந்துச்சு. ஆனா மாடல் டைட்டில் வின் பண்ண 12 நாள்ல இந்த கால் வந்ததால் ப்ரண்ஸ் யாரோ ப்ராங்க் பண்றாங்கனு நினைத்து விட்டுட்டேன்.

ஆனா என் ப்ரண்டு சொன்னாரு இது எதோ உண்மையா இருக்க போகுது நீ திரும்ப கால்பண்ணு என்று சொன்னார். ட்ரு காலர்ல பாத்தா விஜய் டிவினு வந்துச்சு. உடனே கால் பண்ணி இப்போ நடக்குதா வரலாமானு கேட்டோம் உடனே வாங்கனு சொன்னாங்க

அங்க போனப்போ நடிக்க தெரியுமானு கேட்டாங்க தெரியாதுனு சொன்ன ஆனா பண்ணணும்னு ரொம்ப ஆசைனு சொன்ன உடனே போட்டோ வீடியோ எடுத்துக்கிட்டாங்க. அடுத்து ஒரு மணி நேரத்தில் நீங்கள் சலெக்ட் என்று சொல்லிட்டாங்க. அடுத்த வாரமே ஹைதராபாத்தில் ஷூட் போனோம். அந்த ஒருமணி நேரத்தில் எல்லாம் மாறிவிட்டது.

கேள்வி : பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பு?

பதில் : கடைக்குட்டி சிங்கம் சீரியலின் தயாரிப்பாளர் தான் பாக்கியலட்சுமி சீரியலையும் தயாரித்தார். அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கை காரணமாக பாக்கியலட்சுமி சீரியல் வாய்ப்பை கொடுத்தார். (சில சொந்த் காரணங்களுக்காக பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறியதாக கூறியுள்ளார்.)

பாக்கியலட்சுமி சீரியலில் கடைசி 2 எபிசோடுகள் இருக்கும்போதே எனக்கு கனா காணும் காலங்கள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகி 3 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்து என்ன ப்ராஜக்ட் வருதோ எடுத்திடலாம்னு நினைச்சிட்டு இருந்தப்போதான் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகியது தொடர்பாக யூடியூப்பில் வெளியான வீடியோவை பார்த்து மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யன் – நடிகை ஷபானாவை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொண்டார். ஜீ தமிழில் ஹிட் சீரியலான செம்பருத்தி சீரியலில் லீடு ரோலில் நடித்து வருபவர் ஷபானா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment