சின்னத்திரையின் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானசா. விஜய் டிவியின் ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர் அந்த சீரியலில் நாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததது.
சின்னத்திரையில், ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த ஆல்யா மானசா 2-வது பிரசவத்தின் காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஆல்யா மீண்டும் சின்னத்திரை சீரியலில் நடிக்க தயாராகி வருகிறார். அவர் மீண்டும் விஜய் டிவி சீரியலில் நடிப்பாரா அல்லது வேறு டிவி சீரியலில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, 2-வது பிரசவத்திற்கு பிறகு சற்று உடல் எடை கூடிய ஆல்யா மானசா,
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சீவ் 2 மாதத்தில் 10 கிலோ எடை குறைத்த மனைவிக்கு ஒரு சின்ன பரிசு என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“