ராஜா ராணி சீரியல் நடிகைக்கு கல்யாணம்: மாப்பிள்ளை யாரு?

ராஜா ராணி சீரியல் முதல் சீசனில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அன்ஷு ரெட்டி தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

anshu reddy engagements, serial actress anshu reddy engaged, actress anshu reddy with sowmith reddy, அன்ஷு ரெட்டி, நடிகை அன்ஷு ரெட்டி நிச்சதார்த்தம், அன்ஷு ரெட்டி திருமணம், ராஜா ராணி சீரியல் நடிகை அன்ஷு ரெட்டி கல்யாணம், சௌமித் ரெட்டி, raja rani serial actress anshu reddy gets engagements, tamil entertainments

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட் ஆன சீரியல்களில் ஒன்றான ராஜா ராணி சீசன் சீரியலில் நடித்து கலக்கிய அன்ஷு ரெட்டிக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவருக்கு சினிமா மற்றும் டிவி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் அன்ஷு ரெட்டியின் வருங்கால கணவர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் அவரைப் பற்றி இணையத்தில் தேடி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாப்புலரான சீரியலில் ஒன்று ராஜா ராணி சீரியல். இந்த சீரியலின் முதல் சீசனுக்கு ரசிகர்கள் இடையே கிடைத்த பெரு வரவேற்பால் தற்போது 2வது சீசன் எடுக்கப்பட்டு ராஜா ராணி 2வது சீசனும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

ராஜா ராணி முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அன்ஷு ரெட்டி. அதில், அவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார். ராஜா ராணி சீரியலைத் தொடர்ந்து, ஜெயா டிவியில் ஒளிபரப்பான கோபுரங்கள் சாய்வதில்லை என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அன்ஷு ரெட்டி தமிழ் டிவி சீரியல்களில் மட்டுமல்லாமல் பல தெலுங்கு சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தெலுங்கில் அன்ஷு ரெட்டி நடித்த காதலோ ராஜகுமாரி சீரியல் (Kathalo Rajakumari) தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இப்படி அன்ஷு ரெட்டி தென்னிந்திய டிவி சீரியல்களில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

இந்த சூழலில்தான், ராஜா ராணி சீரியல் முதல் சீசனில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற அன்ஷு ரெட்டி தனக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அன்ஷு ரெட்டிக்கும் சௌமித் ரெட்டி என்பவருக்கும் ஆகஸ்ட் 25ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அன்ஷு ரெட்டியின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் அவருக்கு நெருக்கமான நடிகைகள், நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர். அன்ஷு ரெட்டி தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதே போல, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

நடிகை அன்ஷு ரெட்டியின் நிச்சயதார்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் விரைவில் திருமணம் எப்போது நடைபெறும் என்பதையும் அறிவிப்பா என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள், சிரீயல் நடிகைகள், நடிகர்கள், ரசிகர்க பலரும் அன்ஷு ரெட்டிக்கு திருமண வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதே போல, அன்ஷு ரெட்டியை திருமணம் செய்துகொள்ள உள்ள சௌமித் ரெட்டிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress anshu reddy gets engagement with fans wishes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com