நிச்சயதார்த்த வீடியோ: வாணி ராணி சீரியல் நடிகை கலக்கல் கொண்டாட்டம்

நிச்சயதார்த்த விழாவில் நக்‌ஷத்திராவும் ராகவ்வும் கலக்கலாக ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்த வீடியோவை நக்‌ஷத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

serial actress nakshathra, actress nakshathra nagesh, nakshathra engagement video, சன் டிவி, சீரிய நடிகை நக்‌ஷத்திரா, நடிகை நக்‌ஷத்திரா நிச்சயதார்த்தம், வீடியோ, sun tv serial actress nakshathra, tamil news, tamil entetainment news, nakshathra wedding

சன் டியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகை நக்‌ஷத்திரா தனது திருமண நிச்சயதார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை நக்‌ஷத்திரா. செய்திச் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது கேரியரைத் தொடங்கிய நக்‌ஷத்திரா நடிகையாக தன்னை பரிணமித்துக்க்கொண்டார். வாணி ராணி சீரியலைத் தொடர்ந்து, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, மின்னலே, நாயகி, திருமகள் என பல சீரியல்களில் நடித்து வந்தார். டிவி சீரியல்களைத் தொடர்ந்து, மிஸ்டர் லோக்கல், இரும்புதிரை, வாயை மூடி பேசவும் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.

கொரோனாவுக்கு பிறகு, நடிகைகல் பலர் தொடர்ந்து தங்கள் திருமணத்தை அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், திருமணம் செய்ய முடிவு செய்த நடிகை நக்‌ஷத்திரா கடந்த ஜனவரி 22ம் தேதி ராகவ் என்பவரை தனது காதலர் என்று வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

நக்‌ஷத்திரா காதலரை வெளிப்படையாக அறிவித்தபோதே திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

இந்த நிலையில், நக்‌ஷத்திராவும் ராகவ்வும் கடந்த ஜனவரி 26ம் தேதி மோதிரம் மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். ஆடம்பரமாக நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் நக்‌ஷத்திராவும் ராகவ்வும் கலக்கலாக ஆடிப்பாடி கொண்டாடி மகிழ்ந்த வீடியோவை நக்‌ஷத்திரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நக்‌ஷத்திராவும் ராகவ்வும் திருமண நிச்சயதார்த்த விழாவில் ஆடிப்பாடி கொண்டாடிய வீடியோவைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் அவர்களுக்கு அட்வான்ஸ் திருமண வாழ்த்து கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Serial actress nakshathra engagement video goes viral

Next Story
அம்மாவின் செல்லப்பிள்ளைகள் யார்? அனல் பறக்கும் இந்த வார நீயா? நானா?neeya naana hotstar neeya naana gopinath
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com