/indian-express-tamil/media/media_files/2025/10/18/shruti-narayanan-2025-10-18-09-24-06.jpg)
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இறுதியாக திருமணம் முடிந்தது என்று வெளியிட்டுள்ள பதிவு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப கதை தான் என்றாலும், அதிரடி, ஆக்ஷனுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், சின்னத்திரை டி.ஆர்.பியில் முன்னணியில் இருந்து வருகிறது. இதில் வில்லி ரோஹினி கேரக்டரின் நெருங்கிய தோழி வித்யா கேரக்டரில் நடித்து வருபவர் ஸ்ருதி நாராயணன். ரோஹினியின் வில்லத்தனமான திட்டங்களுக்கு வித்யா உதவியாக இருக்கிறார்.
இந்த சீரியலில் இவருக்கு முக்கிய கேரக்டர் இல்லை என்றாலும், வித்யா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் ஸ்ருதி நாராயணனின் சர்ச்சை வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பரபரபபை ஏற்படுத்தியது. ஆனால் இந்த வீடியோ ஏ.ஐ.தொழில்நட்பத்தில் உருவாக்கப்பட்டது என்று ஸ்ருதி விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் ஸ்ருதி புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சீரியலில், வித்யா கேரக்டரும் – முருகன் கேரக்டரும் காதலித்து வரும் நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளில், இருவருக்கும் திருமணம் நடைபெறுவது போன்ற காட்சிகள் வந்து கொண்டு இருந்தது. கடந்த எபிசோடுகளில் முருகனிடம் ரோஹிணி பணம் கேட்டதும் அதற்கு வித்யா சண்டை போட்ட சீன்கள் எடுக்கப்பட்டது. இதனால் வித்யா - முருகன் கல்யாணம் நடைபெறும் போது சிக்கல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரச்னைகளை ரோஹிணி எப்படி சமாளிக்கப் போகிறார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், சிறகடிக்க சீரியலில் வித்யா - முருகன் திருமணம் நடைபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்ருதி நாரயணன் திருமணம் இறுதியாக முடிந்தது என்று பதிவிட்டுள்ளார். இதன் காரணமாக ரோஹினி மீண்டும் முத்துவிடம் மாட்டிக்கொள்வாரா? அல்லது தப்பித்துவிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.