Advertisment

நடிகை சரண்யா திருமணத்தில் சினிமா பிரபலங்கள் நேரில் வாழ்த்து; ‘எதிர்நீச்சல்’ சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்

சினிமா, சீரியல் நடிகை சரண்யா ரவிச்சந்திரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

author-image
Balaji E
New Update
ethirneechal

எதிர்நீச்சல் சீரியல் முடியும்போது ரசிகர்கள் பலரும் சீசன் 2 வருமா? என்று சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். இதற்கு எதிர்நீச்சல் சீரியலின் சீசன் 2 வரும் என இயக்குனர் திருச்செல்வம் கூறினார்.

அண்மையில், வெளியான `பைரி' படத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் நடிகை சரண்யா ரவிச்சந்திரன். இவர் சினிமா, சீரியல் இரண்டிலுமே நடித்து வருகிறார். கிராமப்புறத்தில் இருந்து பிறந்து வளர்ந்த சரண்யா ரவிச்சந்திரன், சினிமா மீதுள்ள காதலால் தொடர்ந்து திரைத்துறைக்கு நடிக்க வந்து சினிமாவிலும் சீரியலிலும் நடித்து வருகிறார். தனக்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

Advertisment

இந்நிலையில், சரண்யாவிற்கும் பரத் என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு சரண்யாதனது கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சரண்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.

அதே நேரத்தில், சன் டிவியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற `எதிர்நீச்சல்' சீரியல் முடிந்ததால், ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மக்கள் பெரிய அளவில் ஆதரவளித்தனர். நடிகர் மாரிமுத்துவின் மறைவு எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களை பெரிய அளவில் பாதித்தது.

எதிர்நீச்சல் சீரியல் முடியும்போது ரசிகர்கள் பலரும் சீசன் 2 வருமா? என்று சமூக வலைதளங்களில் கேட்டு வந்தனர். இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலின் சீசன் 2 வரும் என இயக்குனர் திருச்செல்வம் கூறினார். இதைத் தொடர்ந்து, தற்போது விரைவில் எதிர்நீச்சல் சீரியல் சீசன் 2 பாகம் வர உள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வரைலாக பரவி வருகிறது. எதிர்நீச்சல் சீரில் சீசன் 2 அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிவி சீரியல் நாயகிகள் பலரின் குரலாக ஒலித்தவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் அக்‌ஷய பிரபா. இவருக்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். சீரியலில் அவர் யாருக்கெல்லாம் டப்பிங் பேசுகிறாரோ அவற்றை எல்லாம் லைவ் ஆக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசி பகிர்ந்து வருகிறார்.

டிவி சீரியலில் நாயகிகளுக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக கல்க்கி வரும் அக்‌ஷய பிரபாவிற்கும் தீபக் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்வில் சின்னத்திரை நடிகை ஆயிஷா கலந்து கொண்டு வாழ்த்தினார். ஆயிஷாவின் குரலாய் இருந்தவர் அக்‌ஷய பிரபா என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment