சமூகவலைதளங்களின் மூலம் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் பல நடிகர் நடிகைகள் அசத்தி வருகின்றனர். இந்தியாவில் டிக்டாக் ஆக்டீவாக இருந்து காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் தளமான அதை பயன்படுத்திக்கொண்டனர்.

ஆனால் டிக்டாக் தற்போது இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில். பலரும் டிக்டாக்-க்கு பதிலாக இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வருகினறனர். டிக்டாக் மூலம் பிரபலமான பலர் தற்போது சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது பாரதி கண்ணம்மா
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு வரும் வினுஷா ரசிகர்கள் மத்தியில் தனது நடிப்பின் மூலம் பாராட்டுக்களை பெற்று வருகிறார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் வினுஷா அவ்வப்போது தனது புகைபடம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த வகையில் சமீபத்தில் இவர் அசல் கிராமத்து லுக்கில் நடத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பட்டி கரைச்சு செஞ்சு வச்ச செலையா என்று பதிவிட்டுள்ள இந்த படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil