ஜீவாவுக்கு ஜோடியானார் ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, ஜீவா ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, ஜீவா ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
shalini pandey

தெலுங்கில் வெளியான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாலினி பாண்டே, ஜீவா ஜோடியாக தமிழ்ப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

Advertisment

சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்துள்ளார் ஜீவா. இந்தப் படத்தில் ஜெய், ‘மிர்ச்சி’ சிவா, கேத்ரின் தெரேசா, நிக்கி கல்ரானி, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், ரோபோ சங்கர், சந்தான பாரதி, காஜல் பசுபதி ஆகியோர் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். குஷ்பூவின் ‘அவ்னி மூவிஸ்’ நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். காரைக்குடியில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு, காசி மற்றும் ஹைதராபாத்திலும் நடைபெற்றது. வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜீவா. அவரின் 29வது படமான இதை, அறிமுக இயக்குநர் டான் சாண்டி இயக்குகிறார். ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு இருவரும் காமெடியன்களாக நடிக்கின்றனர்.

Advertisment
Advertisements

‘விக்ரம் வேதா’ படத்துக்கு இசையமைத்த சாம் சி.எஸ்., இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்கிறார். ஜீவா ஜோடியாக, ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படத்தில் நடித்த ஷாலினி பாண்டே நடிக்கிறார். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Kalakalappu 2 Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: