கடந்த 2010-ஆம் ஆண்டு ‘விருதகிரி’ என்ற படத்தை இயக்கி நடித்திருந்தார் விஜயகாந்த். அதன்பின், அவர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அதன் பிறகு பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் கேட்டும்கூட விஜயகாந்த் நடிக்க சம்மதிக்கவில்லை. அரசியலில் மிகத் தீவிரமாக இருந்தார். இதையடுத்து, அவரது இளைய மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ எனும் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார். இதில் விஜயகாந்தும் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
ஆனால், இப்படம் பெரும் தோல்வியடைந்தது. அதன்பின், “தமிழன் என்று சொல்” எனும் படத்தில் சண்முகப்பாண்டியன் நடிக்க விருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் சண்முகப் பாண்டியனுடன் இணைந்து விஜயகாந்த் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. விஜயகாந்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியானது.
புதுமுக இயக்குனர் அருண் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும், ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால், திடீரென இப்படம் டிராப் ஆனது.
இதையடுத்து, பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகப்பாண்டியன் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. அப்படத்திற்கு ‘மதுர வீரன்’ எனவும் டைட்டில் வைக்கப்பட்டது. பூ, சகுனி, சேட்டை, சண்டி வீரன் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக முத்தையா பணியாற்றியுள்ளார். இதனால், இப்படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு உண்டானது.
இந்நிலையில், இன்று ‘மதுர வீரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. விஜயகாந்த் அதனை வெளியிட்டுள்ளார். இதையடுத்து, ட்விட்டரில் “மதுர வீரன்” ட்ரெண்டிங் ஆனது.
#MaduraVeeran #FirstLook#மதுரவீரன் @MaduraVeeran__ pic.twitter.com/uyqvJluDTi
— Vijayakant (@iVijayakant) July 29, 2017
சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இப்படம் உள்ளது.