ஷில்பா ஷெட்டியின் கர்ப்பத்துக்கு காரணமான பிரபல இயக்குநர்

ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதாக பிரபல இயக்குநர் அனுராக் பாஸு அனுப்பிய குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

ஷில்பா ஷெட்டி கர்ப்பமாக இருப்பதாக பிரபல இயக்குநர் அனுராக் பாஸு அனுப்பிய குறுஞ்செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘குஷி’ படத்தில் கூட ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இவருக்கும், பிரபல தொழிலதிபரான ராஜ் குந்த்ராவுக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2012ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

குழந்தை பிறந்த பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டாத ஷில்பா ஷெட்டி, ‘சூப்பர் டான்ஸர் 2’ என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். ‘மர்டர்’, ‘பர்ஃபி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய அனுராக் பாஸுவும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு ஷூட்டிங் இடைவேளையில் ஷில்பாவின் செல்போனை அவருக்குத் தெரியாமல் எடுத்துச் சென்ற அனுராக் பாஸு, ‘தான் கர்ப்பமாக இருக்கிறேன்’ என ஷில்பாவின் தங்கையான ஷமிதா ஷெட்டிக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து மகிழ்ந்த ஷமிதா ஷெட்டி, பலருக்கும் இந்தத் தகவலை ஃபார்வேர்டு செய்துள்ளார்.

அத்துடன், தன் அக்காவை வாழ்த்துவதற்காக போன் செய்தபோது, ஷில்பாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. அனுராக்கின் வேலைதான் அது என பின்னர் தெரிய வந்திருக்கிறது. ஆனால், அதற்குள் இந்த விஷயத்தைத் தங்கையிடம் தெளிவுபடுத்துவதற்கு படாத பாடுபட்டு விட்டார் ஷில்பா ஷெட்டி.

இதேபோல ஒருமுறை ஷில்பாவின் மைக்கில் உள்ள பேட்டரியைக் கழட்டிவிட்டார் அனுராக் பாஸு. ஷில்பா பேசுவது கேட்காமல் மைக்கை சோதனையிட்டபோது, அனுராக் பேட்டரியைக் கழட்டி வைத்திருந்த விஷயம் தெரியவந்தது.

×Close
×Close