கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டின்னருக்கு வெளியே சென்ற பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, அன்றைய இரவு இந்தளவிற்கு மோசமாக இருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
செவ்வாய் இரவு டின்னருக்காக ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் மும்பையில் உள்ள பிரபல ரெஸ்டாரண்டிற்கு சென்றிருந்தனர். இருவரும் உணவருந்திவிட்டு வெளியே வந்த போது, தம்பதியை ஃபோட்டோ எடுக்க புகைப்படக்காரர்கள் அனுமதி கோரினர். இதற்கு உண்மையிலேயே இருவரும் ஒப்புக் கொண்டு, போஸ் தர தயாரானார்கள்.
ஆனால், அந்த ஹோட்டலில் இருந்த பவுன்சர்களில் ஒருவர் திடீரென்று படம் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படக்காரர்களை தாக்கத் தொடங்கினார். இதையடுத்து மற்ற பவுன்சர்களும் கண்மூடித் தனமாக புகைப்படக்காரர்களை தாக்கத் தொடங்கினர். மிகவும் மோசமாக மாறிய இந்த சண்டையால், புகைப்படக்காரர்களின் முகம் மற்றும் தலை கடுமையாக தாக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த "இந்தியன் எக்ஸ்பிரஸ்" புகைப்படக்காரர் அங்கு நடந்த சம்பவம் குறித்து கூறிகையில், "ஷில்பாவும் அவரது கணவரும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். அதன்பின், அவர்கள் காரில் ஏறி செல்லும் வரை அனைத்தும் அமைதியாக தான் சென்றுக் கொண்டிருந்தது. அவர்கள் சென்ற பின், அங்கு நின்றுக் கொண்டிருந்த அந்த ரெஸ்டாரண்டின் பவுன்சர்கள் எந்தவித காரணமும் இல்லாமல் திடீரென அடிக்க ஆரம்பித்தனர். ஒரு புகைப்படக்காரரின் முகத்தின் பவுன்சர் ஆக்ரோஷமாக தாக்கியதில் அவரது முகத்தில் இருந்து ரத்தம் வழிந்தது. பின்னர் இந்த சம்பவத்தை அறிந்த ஷில்பா அந்த புகைப்படக்காரருக்கு உதவுவதாக தெரிவித்தார்."
இந்த சம்பவத்தையடுத்து, ஹோட்டல் உரிமையாளர்கள் மீதும், புகைப்படக்காரர்களை தாக்கிய பவுன்சர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்வாகமும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், அந்த பாதுகாப்பு நிறுவனத்தையும் மாற்றிவிட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து ஷில்பா ஷெட்டியும் வேதனை தெரிவித்துள்ளார். "இது மிகவும் அதிருப்தியான சம்பவம். உண்மையில் நடந்திருக்கக் கூடாத சம்பவம் இது. நான் போஸ் கொடுத்துவிட்டு சென்ற பிறகு, இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. நீண்ட நேரமாக காத்திருந்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது இப்படியொரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படக்காரர்கள் தாக்கப்படுவதற்கு முன் எடுத்த போட்டோக்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z236-1-300x217.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z237-300x217.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2017/09/z238-300x217.jpg)