/indian-express-tamil/media/media_files/2025/11/05/kalai-2025-11-05-09-06-44.jpg)
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தினந்தோறும் போக்களமாகவே உள்ளது. 20 போட்டியளர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இதனிடையே வைல்டு கார்டு போட்டியாளர்கள் என திவ்யா, சாண்ட்ரா, பிரஜின், அமித் ஆகியோர் உள்ளே சென்றுள்ளனர். எப்படியாவது பிக்பாஸ் நிகழ்ச்சி சூழலை மாற்ற வேண்டும் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர், இருந்தாலும் எந்த முன்னேற்றமும் இருந்த மாதிரி இல்லை.
வீட்டு தலையான திவ்யாவிற்கும் போட்டியாளரான பார்வதிக்கும் இடையே மோதல்கள் வெடித்து வருகிறது. நீ சொன்னாலும் கேட்மாட்டேன், பிக்பாஸ் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்ற கோணத்தில் பிரச்சனையை மட்டுமே ஸ்டார்டஜியாக வைத்து பார்வதி விளையாடி வருகிறார். இதனிடையே அங்கு தனக்கு சப்போர்ட் இல்லை என்று தெரிந்ததும் கம்ருதீனை சில நாட்கள் லவ் என்ற பெயரில் யூஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஒட்டுமொத்த பிக்பாஸ் வீடுமே பார்வதிக்கு எதிராக இருக்கும் நிலையில் திவாகர் மட்டும் தான் பார்வதிக்கு ஆதரவாக இருக்கிறார்.
வீட்டுத் தலையான திவ்யா தன்னால் முடிந்த எல்லா வேலைகளையும் சிறப்பாக செய்து வருகிறார். இவரது திறமையில் இம்ப்ரஸான மக்கள் திவ்யா தான் டைட்டில் வின்னர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், பார்வதி, கம்ருதீனை தன் தேவைக்காக யூஸ் பண்ணுகிறார் என்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கலையரசன் குற்றம்சாட்டியுள்ளார். நேர்காணல் ஒன்றில் அவர் பேசியதாவது, “என்னை ரொம்ப டென்ஷன் பண்ணுனது சபரிதான். எப்போதும் சபரி என்னை தான் டார்கெட் பண்ணினார். முதல் இரண்டு வாரத்தில் பார்வதியும், நானும் ரொம்ப க்ளோஷாக இருந்தோம்.
பார்வதி, கம்ருதீனை யூஸ் பண்ணுவதாக என்னிடமே சொல்லியிருக்காங்க. நாங்கள் எல்லாம் பார்வதியிடம் ஒதுங்க ஆரம்பித்ததுடன் அவர் கம்ருதீனிடம் நெருங்கி பழகினார். அவர் மட்டும் தான் பிக்பாஸ் வீட்டில் அடிக்க கை ஓங்குவது போன்ற வேலை செய்து வருகிறார். எனக்கு பார்வதி இவ்வளவு தான் என்று கணிப்பதற்கு இரண்டு வாரம் ஆனது. பார்வதி விளையாடியது லவ் கேம் தான். தல இல்லையென்றால் தளபதி. இந்த சிசனில் கம்ருதீன் கொஞ்சம் அழகாக இருப்பதால் யூஸ் பண்ணிப்போம் என்று சொன்னார். திவாகர் ஓபனாகவே பார்வதியிடம் இது தவறு என்று சொல்லிவிட்டார்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us