/indian-express-tamil/media/media_files/2025/10/07/bigg-boss-1-2025-10-07-15-14-42.jpg)
பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் அக்டோபர் 5-ஆம் தேதி மிக பிரமாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனை எட்டியுள்ளது. முதல் 7 சீசனை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் விலகிய நிலையில் 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி பல எதிர்ப்புகள் கிளம்பினாலும் ரசிகர்கள் பலரால் தினமும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த பிரபலங்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர். கன்னடத்தில் இந்த நிகழ்ச்சி தற்போது 12-வது சீசனை எட்டியுள்ளது. பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிக்பாஸ் செட்டை இழுத்துமூட கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவின் புறநகரில் உள்ள பிடாடி ஹோப்ளியில் ஜாலி வுட் ஸ்டுடியோஸ் & அட்வென்ச்சர்ஸில் பிக் பாஸ் செட் உள்ளது. இந்த பிக்பாஸ் செட்டில் கழிவு நீர் அகற்றுதல் மற்றும் நீர் மேலாண்மை தொடர்பான விதி மீறல்கள் நடைபெற்றதாகவும் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாததால் மூட கூறி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திர சுவாமி தெரிவித்தார்.
இதனால் பிக்பாஸ் சீசன் 12 இடையிலேயே நிறுத்தப்படுகிறதா என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றனர். இதனால் கன்னட பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் நரேந்திரசுவாமி, பிக்பாஸ் செட் வளாகத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகிறது.
எந்தவொரு சுத்திகரிப்பும் இல்லாமல் கழிவுநீர் வெளிப்படையாக வெளியே விடப்படுகிறது. இது சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும், அதிகாரிகளின் ஆய்வில் செட்டின் உள்ளே மோசமான கழிவு மேலாண்மை நடைமுறைகளும் வெளிப்பட்டன. தயாரிப்புக் குழு சுற்றுச்சூழல் விதிமுறைகளை கடைபிடிக்கும் வரை பிக் பாஸ் கன்னட தளத்தில் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி வைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வசதிக்கான மின்சார விநியோகத்தை துண்டிக்க பெஸ்காமுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.