'சங்கமித்ரா' படத்தில் இருந்து ஷ்ருதிஹாசன் நீக்கம்!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜெயம் ரவி, ஆர்யாவும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது

ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருந்த திரைப்படம் ‘சங்கமித்ரா’. இப்படத்தின் நாயகியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியது. அப்போது ரெட் கார்ப்பெட்டில் ஷ்ருதி முதன்முறையாக நடந்து வந்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஜெயம் ரவி, ஆர்யாவும் இப்படத்தில் நடிக்கிறார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக ரசிகர்களிடையே உருவானது.

இந்நிலையில், தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள இன்று அறிக்கையில், “தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஷ்ருதி ஹாசனுடன் இப்படத்தில் பணிபுரிய முடியாமல் போய்விட்டது” என குறிப்பிட்டுள்ளது.

இப்படத்திற்காக வாள்வீச்சு, குதிரையேற்றம், சண்டைப் பயிற்சி போன்றவற்றை எல்லாம் ஷ்ருதி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை நீக்கியதற்கான காரணம் குறித்து எதுவும் அந்நிறுவனம் தெரிவிக்கவில்லை.

×Close
×Close