/tamil-ie/media/media_files/uploads/2017/12/IMG-20171206-WA0020.jpg)
மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், அவருடைய காதலர் மைக்கேல் கார்செல்லும் இருக்கும் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை, இசையமைப்பாளர், பின்னணிப் பாடகி எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். ஆனால், எதிலுமே அவர் மிகப்பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்பதுதான் சோகம். சுந்தர்.சி இயக்கவுள்ள ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க கமிட்டான ஸ்ருதி, அதிலிருந்து விலகினார். தற்போது அவர் கையில் இருக்கும் ஒரே ஒரு படம், கமல்ஹாசன் இயக்க வேண்டிய ‘சபாஷ் நாயுடு’. ஆனால், அந்தப் படம் எப்போது ஷூட்டிங் போகும் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், தன்னுடைய காதலரான லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்செல்லைத் திருமணம் செய்துகொள்ள ஸ்ருதி ஹாசன் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கமல்ஹாசனிடம் காதலரை அறிமுகப்படுத்தி வைத்த ஸ்ருதி, சமீபத்தில் அம்மா சரிகாவிடமும் அறிமுகப்படுத்தி வைத்தார்.
இன்று ஸ்ருதி ஹாசன் பட்டுச்சேலை கட்டி, தலைநிறைய மல்லிகைப்பூவுடனும், மைக்கேல் கார்செல் பட்டு வேட்டி - சட்டையிலும் மணமக்கள் போல காட்சியளித்தனர். கவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமணம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு வாழ்த்திய கமல்ஹாசனோடு, மணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசனும், மைக்கேல் கார்செல்லும் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ஆக, விரைவில் ஸ்ருதி ஹாசன் - மைக்கேல் கார்செல் திருமண அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.