/tamil-ie/media/media_files/uploads/2017/07/shruthi-1-2.png)
ஸ்ருதி ஹாசன் , இங்கிலாந்து நடிகர் மைக்கேல் கார்செலை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் கிசுகிசுப்புகள் வெளியாகின.
இந்த நிலையில், ஸ்ருதிஹாசன், மைக்கேல் கால்செலை கட்டித் தழுவியபடி இருப்பது போன்ற புகைபடம் மீண்டும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
மும்பை மிர்ரர் தகவலின்படி, தற்போது மைக்கேல் கார்சேல், ஸ்ருதி ஹாசனுடன் நேரத்தை செலவிட மும்பை வந்துள்ளாராம்.
இந்த விஷயத்தை, ஒரு கட்டத்தில் மௌனத்தை கலைத்த ஸ்ருதிஹாசன், அவரது காதல் குறித்து கிசுகிசுக்கப்படுவது குறித்து உறுதி படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை.
பாம்பே டைம்ஸ்-ன் இன்டர்வியூவில் பேசிய ஸ்ருதி கூறும்போது: மற்றவர்களின் கணிப்புகள் பற்றி கவலையில்லை. அது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன். இது எந்தவித எரிச்சலையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. என்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறினார்.
இங்கிலாந்து அரண்மனையில் பிரிட்டன் - இந்தியா கலாச்சார வரவேற்பு நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு அந்த நிகழ்ச்சிக்கான சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கமல் ஹாஸன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் உள்ள மைக்மேல் கார்சேலை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், லண்டன் கேண்ஸ் திரைவிழாவிலும், ஸ்ருதி ஹாசன், மைக்கேல் கார்செலுடன் நடந்து செல்லும் காட்சிகள் இருந்தது கவனிக்கத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.