New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/12/sibiraj.jpg)
Hero Sibiraj in Sathya Tamil Movie 2017 Images
கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத் தலைப்பைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கா’ படத் தலைப்பில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ்.
Hero Sibiraj in Sathya Tamil Movie 2017 Images
கமல்ஹாசன் நடித்த ‘சத்யா’ படத் தலைப்பைத் தொடர்ந்து, ரஜினியின் ‘ரங்கா’ படத் தலைப்பில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ்.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில், சிபிராஜ் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸான படம் ‘சத்யா’. தெலுங்கில் வெளியான ‘ஷணம்’ படத்தின் ரீமேக் இது. ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடித்திருந்தார். காணாமல் போன குழந்தையைத் தேடி மீட்பதுதான் படத்தின் கதை.
பரபர திரைக்கதையால் ‘சத்யா’ படம் வெற்றி பெற்றது. ‘சத்யா’ என்பது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம். 1988ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். அமலா ஹீரோயினாக நடிக்க, ராஜேஷ், நாசர், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தை, கமல்ஹாசனே தயாரித்திருந்தார். அவரிடம் முறைப்படி அனுமதி வாங்கி ‘சத்யா’ தலைப்பைப் பயன்படுத்தினர்.
‘சத்யா’ படத்தைத் தொடர்ந்து ‘ரங்கா’ என்ற படத்தில் நடிக்கிறார் சிபிராஜ். வினோத் இயக்கும் இந்தப் படத்தில், நிகிலா விமல் ஹீரோயினாக நடிக்கிறார். ‘ரங்கா’ என்பது, ரஜினிகாந்த் நடிப்பில் 1982ஆம் ஆண்டு வெளியான படம். ஆர்.தியாகராஜன் இயக்கிய இந்தப் படத்தில், ராதிகா சரத்குமார் ஹீரோயினாக நடித்திருந்தார்.
மேலும், கே.ஆர்.விஜயா, தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். சங்கர் - கணேஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தனர். தேவர் ஃபிலிம்ஸ் சார்பில் தண்டாயுதபாணி இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர்.
கமல் தலைப்பு கொடுத்த வெற்றிபோல், ரஜினி தலைப்பும் சிபிராஜுக்கு வெற்றி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.