scorecardresearch

‘பிக் பாஸ்’ ஹரீஷ் கல்யாண் – ரைஸா படத்தில் பாடிய பிரபல பின்னணிப் பாடகர்

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக இளைஞர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

raiza wilson, harish kalyan, bigg boss tamil

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. தமிழில் முதன்முதலாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை, கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஆரவ், சினேகன், ஓவியா, வையாபுரி, கணேஷ் வெங்கட்ராம், ஆர்த்தி, ஜூலி, காயத்ரி ரகுராம், ஷக்தி, கஞ்சா கருப்பு, நமிதா, ரைஸா, பரணி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், காஜல், சுஜா வருணி, அனுயா, ஸ்ரீ என 19 பேர் கலந்து கொண்டனர்.

இதில், ஹரிஷ் கல்யாண் – ரைஸா தான் இருவரும் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கின்றனர். அந்தப் படத்துக்கு ‘பியார் பிரேமா காதல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்  படத்தை, இளன் என்பவர் இயக்குகிறார். கிருஷ்ணா, சந்திரன் நடித்த ‘கிரகணம்’ படத்தை இவர் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கே புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். ஃபிலிம்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

‘பியார் பிரேமா காதல்’ படத்துக்காக இளைஞர்களின் மனம் கவர்ந்த பிரபல பின்னணிப் பாடகரான சித் ஸ்ரீராம் ஒரு பாடலைப் பாடியுள்ளார். ‘கடல்’ படத்தில் இடம்பெற்ற ‘அடியே’, ‘ஐ’ படத்தில் இடம்பெற்ற ‘என்னோடு நீ இருந்தால்’, ‘24’ படத்தில் இடம்பெற்ற ‘மெய்நிகரா’, ‘நானும் ரெளடிதான்’ படத்தில் இடம்பெற்ற ‘என்னை மாற்றும் காதலே’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் இடம்பெற்ற ‘மறுவார்த்தை பேசாதே’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர் சித் ஸ்ரீராம்.

ஏ.ஆ.ரஹ்மான், அனிருத் ரவிச்சந்தர். லியோன் ஜேம்ஸ், தர்புகா சிவா, சந்தோஷ் தயாநிதி, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரதீப் குமார் ஆகிய இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள சித் ஸ்ரீராம், முதன்முறையாக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடியுள்ளார். விரைவில் இந்தப் பாடல் வெளியிடப்படும் என சித் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sid sriram sung a song in yuvan shankar raja musical

Best of Express