வைரலாகும் சிம்புவின் நியூ ஃபிட் ஷேப் வீடியோ!

இன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜிம்மில் சிம்பு ஒர்க் அவுட் செய்கிறார்

AAA படத்தின் மெகா தோல்வி, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனின் புகார், ஞானவேல் ராஜாவின் கிண்டல் பேச்சுகள் என பல சர்ச்சைகளைத் தாண்டி சிம்பு தனது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த வீடியோவைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் புஷ்டியாக தெரிந்த சிம்பு, ‘AAA’ படத்தில் தொப்பையுடன் வலம் வந்தார். முகப் உப்பி, உடல் பெருத்து ரசிகர்களே வெறுக்கும் அளவிற்கு உடலை அதன் போக்கிற்கு விட்டார். ஆனால், அதன்பின் மணிரத்னம் படத்தில் கமிட் ஆன சிம்பு, கடந்த சில நாட்களாக பெரும்பாலும் எதிலும் பங்குபெறாமல், சைலன்ட் மோடில் இருந்தார்.

இந்த நிலையில், இன்று வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜிம்மில் சிம்பு ஒர்க் அவுட் செய்கிறார். தொப்பையைக் குறைத்துவிட்டேன்… இன்னும் உடலை ஷேப் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அந்த வீடியோ மூலம் உணர்த்தியிருக்கிறார். இப்போது அந்த வீடியோ டிரெண்டிங் ஆகி வருகிறது.

அதுசரி! இலக்கு என்ன-னு தானே கேட்குறீங்க… எத்தனை தடவை வீழ்ந்தாலும், ஒவ்வொரு முறையும் தூக்கி நிறுத்தும் ரசிகர்களை திருப்திப்படுத்துவது தான்!.

×Close
×Close