/tamil-ie/media/media_files/uploads/2017/10/simbu-1.jpg)
simbu
இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர், விநியோகஸ்தர் எனப் பல திறமைகள் கொண்டவர் டி.ராஜேந்தர். அவருடைய மகனான சிம்புவுக்கும் இந்த திறமைகள் இருப்பதில் ஆச்சரியம் இல்லைதான். ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள சிம்பு, ‘வல்லவன்’ படத்தை இயக்கி, நடித்தார். ‘கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜாயோகம்’ என்ற படத்தைத் தற்போது இயக்கி வருகிறார்.
பல்வேறு படங்களில் பின்னணி பாடியுள்ள சிம்பு, இதுவரை 100 பாடல்கள் பாடி சத்தமில்லாமல் சாதனை படைத்திருக்கிறார். 2002ஆம் ஆண்டு வெளியான ‘சொன்னால்தான் காதலா’ படத்தில் டி.ஆருக்காக முதன்முதலில் பாடினார். ‘சுக்குமலா சுக்குமலா’ என்ற பாடலைத்தான் அவர் முதலில் பாடினார்.
‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ படத்தில் இடம்பெற்ற ‘என் ஆளோட செருப்பைக் காணோம்’ என்ற பாடலைப் பாடியிருக்கிறார் சிம்பு. இது அவர் பாடிய நூறாவது பாடல். ஜெகன்நாத் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில், ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாகவும், ‘பசங்க’ மற்றும் ‘கோலிசோடா’ படத்தில் சிறுவனாக நடித்த தமிழ் (பாண்டி) ஹீரோவாகவும் நடித்துள்ளனர். இஷான் தேவ், இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/10/En-Aaloda-Seruppa-Kaanom-jagannath-300x217.jpg)
“மிகப்பெரிய நடிகரான சிம்பு, நான் இயக்கியுள்ள படத்தில் பாடியிருப்பதே மகிழ்ச்சி. அந்தப் பாடல் அவரின் 100வது பாடல் என்பது பெருமகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் பாடலைப் பாட மொத்தமாக 40 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். ஸரிப என்ற மூன்று ஸ்வரத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. விஜய் சாகர் எழுதிய இந்தப் பாடலின் சில இடங்களில், தன்னுடைய வசதிக்காக வரிகளை அவரே மாற்றினார். அவர் ஏற்கெனவே நிறைய பாடல்கள் எழுதியிருப்பதால், அவர் எழுதியதும் பாடலுக்கு கூடுதல் அழகு கிடைத்தது. மிக முக்கியமான விஷயம், இந்தப் பாடலைப் பாடுவதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. அன்புக்காக பாடிக் கொடுத்தார்” என நெகிழ்கிறார் இயக்குநர் ஜெகன்நாத்.
டி.ராஜேந்தர், ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, யுவன் சங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஸ்ரீகாந்த் தேவா, தினா, அச்சு ராஜாமணி, போபோ ஷாஷி, ஜி.வி.பிரகாஷ், கணேஷ் ராகவேந்திரா, எஸ்.எஸ்.குமரன், ஜேம்ஸ் வசந்தன், வி.செல்வகணேஷ், எஸ்.தமன், அபிஷேக் - லாரன்ஸ், தரண் குமார், ராகுல் ராஜ், சுனில் கஷ்யப், பிரதீப், ரெஹான், சத்ய தேவ், கார்த்திக் ராஜா, வைத்தி, குறளரசன், அனிருத், இஷான் தேவ் ஆகியோர் இசையில் பாடியுள்ள சிம்பு, தற்போது சந்தானம் நடித்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.