சிம்பு செய்த செயலால் திகைத்து நின்ற விஜய் சேதுபதி!!!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘செக்க சிவந்த வானம்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜய் சேதுபதிக்கு சோறூட்டிய நடிகர் சிம்புவின் புகைப்படம் தான் இன்றைய இணையதளத்தில் வைரலாக வளம் வருகிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், நடிகர் அரவிந்த் சாமி, சிம்பு, அருண் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் படப்பிடிப்பில் எடுக்கும் புகைப்படங்களை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் 4 நடிகர்களும் இருக்கும் ஃபோட்டோ ஒன்றைப் பகிர்ந்தார். கருப்பு வெள்ளை ஸ்டைலில் வெளியான அந்தப் புகைப்படத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து பகிர்ந்தனர்.

மணிரத்னம் படம் என்றாலே ரசிகர்களுக்குத் தனி உற்சாகம். இந்த உற்சாகத்திற்குக் கூடுதல் எனர்ஜியை இந்தப் படப்பிடிப்பு ஃபோட்டோக்கள் அளித்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, மீண்டும் ஒரு புகைப்படம் வைராலி வருகிறது. சிம்புவும் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இவர்கள் இருவரும் இப்போது ஒரு கூட்டணியாக நடிக்கும் படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இவ்வாறு ரசிகர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் விஜய் சேதுபதிக்கு சிம்பு சோறூட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை தற்போது ரசிகர்கள் அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

×Close
×Close